சென்னை அணிக்கு புதிய சிக்கல்! அணிக்கு திரும்பும் டெவோன் கான்வே!

Thu, 11 Apr 2024-1:52 pm,

ஐபிஎல் 2023ல் சென்னை அணிக்காக அதிக ரன் அடித்தவர்களில் டெவோன் கான்வே முன்னணியில் இருந்தார்.  பல போட்டிகளில் சென்னை அணிக்காக முக்கிய நாக் ஆடியுள்ளார்.

 

இந்நிலையில் ஐபிஎல் 2024 ஆரம்பிக்கும் முன்பு எதிர்பாராத விதமாக காயம் அடைந்தார்.  இதன் காரணமாக தற்போது சென்னை அணியில் அவருக்கு பதில் ரச்சின் விளையாடி வருகிறார்.

 

இருப்பினும் கான்வே இல்லாதது சென்னை அணிக்கு ஒரு இழப்பாக இருந்து வருகிறது.  இந்நிலையில், பிளேஆஃப் போட்டிகள் வருவதற்கு முன்பே கான்வே முழுமையாக தகுதி பெறுவார்  கூறப்படுகிறது.

 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரின் போது அவருக்கு இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. மே 21 ஆம் தேதி பிளேஆஃப்கள் தொடங்க உள்ள நிலையில் கான்வே வருவது அணிக்கு பலம் சேர்க்கும்.

 

சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக சிஎஸ்கே ஏப்ரல் 14 ஆம் தேதி வான்கடேவில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விளையாடுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link