Guess Who: சிறு வயதில் செம க்யூட்டாக பிரபல திரை நட்சத்திரங்கள்! யாரென்று தெரிகிறதா?
)
தமிழ் சினிமாக்களில் இருக்கும் நடிகர் நடிகைகள் பலர், உறவினர்களாகவும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பர். ஸ்ருதி ஹாசன்-அக்ஷரா ஹாசன், அருண் விஜய்-ஸ்ரீதேவி, ஜித்தன் ரமேஷ்-ஜீவா என பல சகோதர-சகோதரிகள், அண்ணன் தங்கைகள், அக்காள் தங்கைகள் திரையுலகில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி, கோலிவுட்டில் உள்ள உடன்பிறந்தவர்கள்தான் தேவயானி-நகுல்.
)
தேவையானி ஒரு பக்கம் 90ஸ் கதாநாயகியாக வலம் வர, அவரது தம்பி நகுல் வாலிப வயதிலேயே திரையுலகின் பக்கம் வந்து விட்டார்.
)
ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் இவர் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். தொடர்ந்து, சில பிரபலமான சினிமா பாடல்களையும் பாடியிருக்கிறார்.
தேவயானி, கடந்த சில ஆண்டுகளாகவே சின்னத்திரையில் ஜொலித்து வருகிறார். நாயகி, அண்ணி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், தற்போது அம்மா-மாமியார் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்.
இவர்கள் இருவரும் உடன் பிறப்புகள் என்பது தமிழ் ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும். ஆனாலும், இவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை ஒரு படத்தில் கூட நடித்ததில்லை.
நகுல், தனது தந்தையுடன் இருக்கும் பழைய புகைப்படம்.
தேவயானி மற்றும் நகுலின் சிறு வயது புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.