அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் இயற்கை உணவுகள்
கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தில் அடைப்பு, இதயம் சுருங்குதல் மற்றும் மாரடைப்பு போன்ற இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது சிறுநீரகங்கள், இதயம் மற்றும் பிற உறுப்புகளை சேதப்படுத்தும். கொலஸ்ட்ரால் எடை அதிகரிக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஆயுர்வேத சிகிச்சைகள்: கொலஸ்ட்ராலைக் குறைக்க பல மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. அதே நேரத்தில் ஆயுர்வேதத்தின் மூலமாகவும் இதை கட்டுப்படுத்தலாம். ஆயுர்வேதத்தில் உள்ள பல இயற்கை வைத்தியங்கள் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலுக்கு சிகிச்சை அளிக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இஞ்சி: இஞ்சியில் உள்ள மருத்துவ கூறுகள் எல்.டி.எல் அளவைக் குறைக்கும். இது கொழுப்பை கரைத்து, செரிமானத்தை சீராக்கி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது . இதில் உள்ள இயற்கை கூறுகள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மருதம் பட்டை: இதில் குறிப்பாக ஃபிளாவனாய்டுகள் மற்றும் அர்ஜுனோனிக் அமிலம் உள்ளது. இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ராலை குறைக்க மருத மரத்தின் பட்டை நீரை அருந்தலாம். மருத மரத்தின் பட்டை நீர் உடலில் உப்பசத்தை நீக்கி கெட்ட கொழுப்பை குறைக்கும்.
வெந்தயம்: வெந்தயத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் பல ஆரோக்கிய கூறுகள் உள்ளன. இதை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். இரவில் தூங்கும் போது வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை குடிப்பது நன்மை பயக்கும்.
அஸ்வகந்தா: அஸ்வகந்தா மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடலின் இரத்த நாளங்களைச் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இது கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கு, ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை எடுத்து, ஒரு கிளாஸ் சூடான பாலை கொதிக்க வைத்து, கொதிக்கும் பாலில் அஸ்வகந்தா பொடியை சேர்க்கவும். நன்றாக கலந்து குடிக்கவும்.
பூண்டு: பூண்டு என்பது ஆயுர்வேதத்தில் கொழுப்பைக் குறைக்கப் பயன்படும் ஒரு இயற்கை தீர்வாகும். பூண்டில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் அல்லிசின் என்ற கலவை உள்ளது. இதற்கு 3-4 பூண்டு பற்களை எடுத்து தோலுரித்து நறுக்கவும். அவற்றை சிறிது தண்ணீருடன் சேர்த்து மெல்லுங்கள். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். இதில் வைட்டமின் சி, ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு சிறிய நெல்லிக்காயை வெட்டி விதைகளை எடுக்கவும். மிக்ஸியில் அரைத்து அதிலிருந்து சாறு எடுக்கவும். இந்த நெல்லிக்காய் சாற்றை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து நன்றாக கலக்கவும். இதனை வெறும் வயிற்றில் குடிப்பதால் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.