மூளை முதல் கல்லீரல் ஆரோக்கியம் வரை; சத்தான கோலின் நிறைந்த உணவுகள் ‘இவை’ தான்!
நிலக்கடலை ஒரு கோலின் நிறைந்த உணவு. இது முழுமையாக அல்லது நிலகடலை வெண்ணெய், அல்லது கடலை எண்ணெய் வடிவத்திலும் உணவில் சேர்க்கலாம்.
பச்சை காய்கறிகளில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர புரதங்கள் அதிகம் உள்ளன. அவற்றில் அதிக அளவு கோலின் உள்ளது.
சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு, தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இது சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தின் சிறந்த மூலமாகும். சோயா மற்றும் டோஃபுவில் அதிக அளவு கோலின் உள்ளது. ஒரு கப் சோயா பாலில் 81.7 மி.கி கோலின் சத்து உள்ளது.
ராஜ்மா என்னும் பீன்ஸ் வகை பருப்பில் கோலின் என்ற சத்து அதிக அளவில் உள்ளது.
கினோவா முழுமையான புரதத்தின் மூலமாகும். கோலின் சத்து நிறைந்த இந்த சைவ உணவு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.