கம்மி பட்ஜெட்டில் மனநிறைவான 7 கிறிஸ்துமஸ் பரிசுகள்!!
பூங்கொத்து: பூக்கள் என்றால் யாருக்குதான் பிடிக்காது? நீங்கள் பரிசு கொடுக்க நினைக்கும் நபருக்கு என்னென்ன பூக்கள் பிடிக்குமோ அதை ஒரு பூங்கொத்தாக செய்து கொடுக்கலாம். அல்லது அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாக்லெட் பிடிக்கும் என்றால், அந்த பூங்கொத்திற்கு நடுவே சாக்லெட்டுகளையும் வைக்கலாம்.
நன்கொடை:
நீங்கள் கிஃப்ட் கொடுக்க நினைக்கும் நபர், பிறருக்கு உதவி செய்ய விரும்புபவராக இருந்தால் அவரது பெயரில் ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளிக்கலாம்.
டிஜிட்டல் பரிசுகள்:
அவர்களுக்கு பிடித்த பாடல்களை வைத்து ஒரு ப்ளே லிஸ்டை கிரியேட் செய்து, அல்லது அவர்களது போட்டோக்களை ஸ்லைட் ஷோவாக அதை வீடியோ பதிவாக கொடுக்கலாம்.
இ-புத்தகங்கள்:
உங்களுக்கு பிடித்த நபருக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும் என்றால், அவர்களுக்கு இ-புத்தகங்களை பரிசாக கொடுக்கலாம். அல்லது, ஆடியோ புத்தகங்களையும் ஆன்லைன் வழியாக பரிசளிக்கலாம்.
பரிசு கூடைகள்:
நீங்கள் பரிசு கொடுக்க நினைக்கும் நபருக்கு பிடித்த ஸ்நாக்ஸ், அழகு பொருட்கள், பயணம் செய்யும் போது தேவைப்படும் பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து இந்த பரிசை வழங்கலாம்.
ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன்:
நீங்கள் பரிசு கொடுக்க விரும்பும் நபர் படம் அல்லது தொடர்கள் வாங்க விரும்புபவராக இருந்தால் நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி +, அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஏதேனும் தளத்தின் சந்தாவை நீங்கள் செலுத்தி, அவர்களுக்கு பரிசளிக்கலாம்.
கார்டுகள்:
ஆதி காலத்தில் இருந்து இப்போது வரை அழியாமல் இருக்கும் பரிசுகளுள் ஒன்று இது. இது போன்ற ஒரு கார்டை வாங்கி அதில் உங்களுக்கு தோன்றும் கவிதை அல்லது அவர்கள் குறித்த நல்ல விஷயங்களை எழுதி பரிசளிக்கலாம்.