Re Release Movies : மார்ச் மாதம் ரீ-ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்! எந்த தேதியில் எதை பார்க்கலாம்?
தமிழ் படங்கள் பல, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. சூப்பர் ஸ்டார் படம் முதல், குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி ஹிட் அடித்த குட்டி ஸ்டார்களின் படம் வரை, அனைத்தும் ரீ-ரிலீஸில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன.
வாரணம் ஆயிரம், 3, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை திரையரங்கில் சென்று பார்ப்பவர்கள், இசை கச்சேரியே நடத்துகின்றனர். அந்த வகையில், வரும் மார்ச் மாதமும் சில சூப்பர் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
விஜய் நடிப்பில், கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம், கில்லி. வெளியாகி 20 வருடங்கள் கழித்து இப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறாது. இந்த படம், அப்போதே 50 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த படம், கில்லி. இந்த படத்தில் பிரியாமணி, சரவணன், பொன்வண்னன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.2007ஆம் ஆண்டு வெளியான படம், 17 வருடங்கள் கழித்து வரும் மார்ச் மாதம் ரீ-ரிலீஸ் ஆகின்றது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீ-மேக் ஆக வெளியானது, அஜித்தின் பில்லா திரைப்படம், இதனை விஷ்ணு வரதன் இயக்கியிருந்தார். 2007ஆம் ஆண்டு வெளியான படம், பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி வெளியாகிறது. படம் நன்றாக ஓடினால், மார்ச் இறுதி வரை திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும்.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997ல் வெளியான படம், மின்சார கனவு. பிரபு தேவா, அரவிந்த் சுவாமி, கஜோல் ஆகியோர் இதில் நடித்திருந்தனர். படத்தில் ஏஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இந்த படத்தினை வரும் மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் பார்க்கலாம்.
1998ல் வெளியாகி மாபெறும் ஹிட் அடித்த படம், காதல் மன்னன். இதில், அஜித் குமார் கதாநாயகனாகவும் மானு கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். டைட்டிலில் உள்ளது போலவே, இந்த படத்திலும் காதல் காட்சிகள் நிறையவே இருக்கும். வரும் மார்ச் 1ஆம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் பார்க்கலாம்.