முக ஸ்டாலின் நேற்றைய அரசியல் வரலாறு 2092: முதல்வரை பாராட்டும் பார்த்திபன்

Tue, 02 Aug 2022-1:20 pm,

திரு. மு. க ஸ்டாலின் அவர்கள், இயக்குனரும் நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை கண்டுகளித்தார். திரைப்படத்தைப் பார்த்ததும் , முதல்வர் மு .க .ஸ்டாலின் பார்த்திபனின் இந்த  அசாத்தியமான சாதனை  முயற்சியை வெகுவாகப் பாராட்டினார். 

 "இரவின் நிழல் திரைப்படம்  பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அற்புதம் !" என்று பாராட்டி, பார்த்திபனையும்  படக்குழுவினரையும் வாழ்த்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்

'நேற்றைய அரசியல் வரலாறு - 2092 என்ற தலைப்பில் முதல்வரின் சாதனைப் புத்தகத்தை பார்த்திபன் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் வடிவமைத்து  முதல்வருக்கு பரிசளித்தார்.

 முதல்வரின் பாராட்டு , தனக்கு மிகுந்த தெம்பளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார் பார்த்திபன்

இதுவரை இரவின் நிழல் திரைப்படம் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது 

இரவின் நிழல் திரைப்படம் வெற்றிகரமாக 4 வது வாரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link