Ganesh Chaturthi 2021: தும்பிக்கை முகத்தானை நம்பிக்கையுடன் வழிபடுவோம்

Thu, 09 Sep 2021-9:40 pm,

முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான திருவிழா விநாயகர் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கின்றோம். 

வீடுகளை சுத்தப்படுத்தி, விநாயகருக்கு அலங்காரம் செய்து அவருக்கு அவல் பொரி, பழங்கள், மோதகம், கொழுக்கட்டை என படைத்து பிள்ளையாரை வணங்குகிறோம்.

அண்ணலின் பலம் தும்பிக்கையிலே! நம் பலம் அவன் மேல் வைத்த நம்பிக்கையிலே!

ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடப்படும். வெகு சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு ஆவணி மாதம் 25ஆம் தேதி செப்டம்பர் 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

நாட்டையும், மக்களையும் காக்க இந்த ஆண்டு நாம் எளிமையாக விநாயகர் சிலைகளை வீட்டிலேயே வைத்து வணங்குவோம்.

 

கொரோனாவின் தாக்கத்தினால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடவுள் வழிபாடு எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு நமது உடல் ஆரோக்கியமும் அவசியம்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link