ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் UPS... 50% உத்தரவாத ஓய்வூதியம்... குடும்ப பென்ஷனும் உண்டு... விபரம் இதோ

Sun, 25 Aug 2024-10:52 am,

பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களில், புதிய ஓய்வூதிய அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், மிக முக்கிய நடவடிக்கையாக, மத்திய அமைச்சரவை ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் சிறந்த அம்சங்களை கொண்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

 

50% உத்தரவாத ஓய்வூதியம்: புதிய ஓய்வூதிய அமைப்பில், உத்தரவாத ஓய்வூதியம் குறித்து அதற்கு நிலவி வந்த நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் கடைசி 12 மாதங்களில் வாங்கிய அடிப்படை சம்பளத்தின் 50 % உத்தரவாத ஓய்வூதியமாக இருக்கும் என்று அரசு கூறியுள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம், உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம், குடும்பத்திற்கான ஓய்வூதியம் குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகிய பலன்கள் கிடைக்கும். இந்த பலன்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்து வருபவர்களுக்கு பொருந்தும். 10 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கும் ஓய்வூதிய உத்திரவாதம் உண்டு.

 

குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதிய திட்டம் 2004 முதல் ஓய்வு பெற்ற, புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

 

குறைந்தபட்ச ஓய்வூதிய உத்திரவாதம்: குறைந்தபட்சம் 10 ஆண்டுகளை வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதையும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் உறுதி செய்கிறது.

 

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசின் பங்களிப்பு 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அமலில் உள்ள புதிய ஓய்வூதிய அமைப்பில் ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிக்க வேண்டும். அதே சமயம் அரசு 14 சதவீதம் பங்களித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

UPS அமல் படுத்தப்படும் தேதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், வரும் 2025 ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link