IND vs SA: சிறப்பாக விளையாடியது யார்... சொதப்பியது யார்? - இந்திய அணியின் ரிப்போர்ட் கார்டு

Fri, 05 Jan 2024-1:08 pm,

அசத்திய பேட்டர்கள்: தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் பல பேட்டர்கள் இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடினர். அதில் டி20 தொடரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 2 போட்டிகளில் 156 ரன்களை எடுத்தார். ஒருநாள் தொடரில் (3 போட்டிகள்) சாய் சுதர்சன் 127 ரன்கள், சஞ்சு சாம்சன் 120 ரன்களை அடித்து அசத்தினர். டெஸ்ட் தொடரை பொறுத்தவரை விராட் கோலி 172 ரன்கள் (4 இன்னிங்ஸ்), கேஎல் ராகுல் 113 ரன்கள் (3 இன்னிங்ஸ்).

 

மிரட்டிய பந்துவீச்சாளர்கள்: டி20 தொடரில் இந்தியா தரப்பில் இரண்டே போட்டிகளில் 6  விக்கெட்டுகளை குல்தீப் வீசினார். ஒருநாள் தொடரில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீசி, 3 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆவேஷ் கான் 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் தொடரில் பும்ரா 12 விக்கெட்டுகள் (3 இன்னிங்ஸ்), சிராஜ் 9 விக்கெட்டுகளை (3 இன்னிங்ஸ்) வீழ்த்தினர்.

மோசமான ஆட்டம்: சுப்மாந் கில்லுக்கு இந்த சுற்றுப்பயணம் சிறப்பானதாக அமையவில்லை. அவர் டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாடினார். டி20இல் 8 ரன்களையும், டெஸ்டில் 4 இன்னிங்ஸில் 74 ரன்களையுமே குவித்தார். திலக் வர்மா 2 டி20 போட்டிகளில் 29 ரன்களை மட்டுமே எடுத்தார். பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் மிக சுமாராக பந்துவீசினர். 

கலக்கிய அறிமுக வீரர்: வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ரிங்கு சிங் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் ரன்களை குவித்தார். டெஸ்ட் போட்டியில் முகேஷ் குமார் 2ஆவது போட்டியில் சிறப்பாக வீசினார். 

 

தோல்வி காணாத இந்தியா: இந்திய அணி மூன்று தொடர்களிலும் மூன்று கேப்டன்கள் தலைமையில் விளையாடியது. இதில் ஒரு தொடரில் கூட இந்தியா தோல்வியடையவில்லை. சூர்யகுமார் தலைமையிலான டி20 அணி 1-1 என்ற கணக்கில் தொடரை டிரா செய்தது. கேஎல் ராகுல் தலைமையிலான ஒருநாள் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் வென்றனர்.

 

பார்முக்கு திரும்பிய வீரர்கள்:  விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்வியால் துவண்டு போயிருந்த நிலையில், இந்த சுற்றுப்பயணம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வழங்கி உள்ளது. 

 

ஒட்டுமொத்தமாக...: தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. இருப்பினும், அதனை தவறவிட்டது. டி20, ஒருநாள் போட்டிகளில் இந்தியா சிறப்பாகவே விளையாடியது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link