விபத்தில் சிக்கிய ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

Mon, 09 Oct 2023-12:45 pm,

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் அனைவரிடத்திலும் பரிச்சியமான முகமாக மாறினார் மணிமேகலை. 

இதற்கு முன்னர், இவர் ஒரு பாடல் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தார். இவர் இருக்கும் நிகழ்ச்சிகளுக்கு டி.ஆர்.பிக்கள் எகிறின. 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த கோமாளிகளுள் மணிமேகலையும் ஒருவர். மணிமேகலை, அந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் முதல் வந்திருக்கும் கெஸ்ட் வரை அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்து தள்ளுவார். 

இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களுள் மணிமேகலையும் ஒருவர். தான் செய்யும் விஷயங்களை அடிக்கடி இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றிக்கொண்டே இருப்பார். 

பயணங்களின் போது எடுக்கும் போட்டோக்கள், சாப்பிடும் போது எடுக்கும் போட்டோக்கள் என்று ஒன்றையும் விடாமல் அனைத்தையும் பதிவிடுவார் மணி. 

மணிமேகலை தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. 

தரை வழுக்கிவிட்டதால் விழுந்து விட்டதாகவும், எழுந்திருக்க கூட முடியவில்லை என்றும் மிகுந்த மனசோர்வுடன் இருப்பதாகவும் மணிமேகலை இந்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு கமெண்ட் செக்‌ஷனில் ஆறுதல் கூறி வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link