CWC 5: குக் வித் கோமாளி 5-ல் முதல் எலிமினேஷன்! யார் தெரியுமா?
ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
4 சீசன்களாக செஃப் தாமுவுடன் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட், இந்த சீசனில் இருந்து விலகிக்கொண்டார். புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக வந்திருக்கிறார்.
சீரியல் நடிகைகள், சின்னத்திரை நாயகர்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் புது முகங்களாக வந்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷனாக ஒரு நடிகை வெளியேறியிருக்கிறார்.
அவர் வேறு யாருமில்லை, ஷாலின் சோயாதான் என்று கூறப்பட்டது. ஆனால், ஸ்ரீகாந்த் தேவா இந்த போட்டியில் இருந்து எலிமினேட் ஆகியிருக்கிறார்.
கடந்த வாரம் டேஞ்சர் சோனில் இருந்த சோயா, இந்த வாரமும் சொதப்பலான சமயலை செய்திருக்கிறார். இதனால் ஸ்ரீகாந்த் தேவாவுடன் டேஞ்சர் சோன் சென்றார்
ஸ்ரீகாந்த் தேவா மிகவும் சிம்பிளாக சமைத்ததால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.