அமேசான் ஓனரா இருந்தாலும், வீட்டு விலை ரூ. 659 கோடி கொஞ்சம் ஓவர் தான்!
)
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், சர்வதேச பணக்காரர்களில் ஒருவர், இவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு? நாம் இப்போதைய மதிப்பை சொன்னால், சில மணி நேரங்களில் அது மாறிவிடும்....
)
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி, ஜெஃப் பெசோஸின் மொத்த நிகர மதிப்பு சுமார் $156 பில்லியன் ஆகும்
)
உலகில் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோருக்குப் பிறகு உலகின் மூன்றாவது பணக்காரராக இருக்கிறார் ஜெஃப். இது இன்றைய நிலவரம்...
நீண்ட கால கூட்டாளியான மெக்கென்சி ஸ்காட்டுடன் விவாகரத்து செய்த ஜெஃப், சமீபத்தில்பத்திரிகையாளர் மற்றும் தொகுப்பாளர் லாரன் சான்செஸ் உடன் திருமன நிச்சயதார்த்தம் செய்தார்
லாரன் சான்செஸ் உடனான நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு அவர் வாங்கிய இரண்டாவது வீடு இது
கோடீஸ்வரர்கள் மட்டுமே வசிக்கும் இந்தியன் க்ரீக் தீவு (Indian creek island) என்று அழைக்கப்படும் பிரீமியம் தீவில் இந்த மாளிகை அமைந்துள்ளது.
இந்த மாளிகையில் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடு, ஒரு நூலகம், ஒரு பார், உயர் பாதுகாப்பு கதவுகள் மற்றும் நீரூற்று ஆகியவை கொண்ட ஆடம்பரமான வீடு இது