இந்தியா - பாரத் சர்ச்சை ஒரு பக்கம்! பாரம்பரிய பேரை மாற்றிக் கொண்ட நாடுகளின் வரலாறு
இந்தியா என்ற பெயர் பாரத் என்று மாற்றப்படுமா என்ற சர்ச்சை தீவிரமாக இருக்கும் தற்போது, அதற்கான முன்னுதாரணங்கள் உள்ளதா? உலக நாடுகளின் பெயர்கள் மாற்றப்பட்ட சரித்திரம் உண்டா என்ற கேள்விகள் எழுகின்றன
பாரத கண்டம் என்று நம்முடைய நிலபரப்பு அறியப்பட்டது. இந்தியா என்ற வார்த்தை சிந்து நதியின் மூலமாக உருவானது என்பது பொதுவான வரலாறு. 4 நூற்றாண்டு முதலே, இந்தியா, இந்துஸ்தான் என நம் நாடு அடையாளம் காணப்பட்டது. இந்தியாவுக்கு 1947இல் சுதந்திரம் கிடைத்தபோது, இந்தியா என்ற பெயரை நம் நாடு பெற்றது.
பாகிஸ்தான் - பங்களாதேஷ்: பிரிட்டிஷிடம் இருந்து விடுதலை பெற்றபோது, இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தானுக்கு கிடைத்த நிலப்பரப்பு இரு இடங்களில் பிரிந்திருந்தது. பாகிஸ்தானில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனைகளால் 1971 இல் நடந்த போருக்குப் பிறகு, மேற்கு பாகிஸ்தானில் இருந்து பிரிந்த கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என பெயர் சூட்டிக்கொண்டது. இந்த நாட்டை கட்டியெழுப்பியதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா 1993 இல் செக்கோஸ்லோவாக்கியாவின் பிரிவினை, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இரு தனி நாடுகளை உருவாக்க வழிவகுத்தது. இது செக் மற்றும் ஸ்லோவாக் ஆகிய இரு இனக்குழுக்களுக்கு இடையே அதிக சுயாட்சி மற்றும் சுயநிர்ணயத்திற்கான விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது.
முதலில் பர்மா இப்போது மியான்மர் பர்மாவின் பெயர், 1989 இல் இராணுவ ஆட்சியினால் மியான்மர் என மாற்றப்பட்டது. இந்த மாற்றம் சர்வதேச சர்ச்சையையும் எதிர்ப்பையும் சந்தித்தது. இராணுவ அரசாங்கத்தின் அதிகாரத்தை சட்டப்பூர்வமாக்கும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்கா உட்பட சில நாடுகள் இன்னும் பர்மா என்றே பழைய பெயரைக் கொண்டே மியான்மர் நாட்டை குறிப்பிடுகின்றன
இலங்கை முன்பு சிலோனாக இருந்தது 1972 இல், சிலோன் தீவு அதன் பெயரை இலங்கை என்று மாற்றியது. இந்த வார்த்தை சிங்கள மொழியிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த மாற்றம் நாட்டின் பன்முக கலாச்சார அடையாளத்தையும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அதன் காலனித்துவ கடந்த காலத்துடன் அதன் தொடர்பையும் குறைக்கும் நோக்கம் கொண்டது.
சியாம் தாய்லாந்து ஆன கதை தாய்லாந்து 1939 வரை சியாம் என்று அழைக்கப்பட்டது. தாய்லாந்து இராச்சியம் (Kingdom of Thailand) என்று அழைக்கப்படுகிறது.