Work Ethics: வேலை செய்ய ரொம்ப பிடிக்கும்! பணியாளர்களை இப்படி சொல்ல வைக்க டிப்ஸ்!

Fri, 02 Feb 2024-11:03 pm,

பணியிடத்தில் இணக்கமான சூழல் நிலவுவது அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்ய உதவியாக இருக்கும்

மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் பணியாளர்களிடையே நட்புணர்வை வளர்ப்பது மற்றும் விடுப்பு கொள்கைகள் நெகிழ்வுடன் இருப்பது என தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது

அவ்வப்போது பின்னூட்ட அமர்வுகள் மற்றும் அவ்வப்போது கலந்தாலோசனை நடத்துவது என அனைவரின் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்   

சக ஊழியர்களை ஊக்கப்படுத்துவது, அவ்வப்போது பாராட்டுவது போன்றவற்றை இயல்பாக செய்ய வேண்டும். அதிகாரிகளும் பணியாளர்களும் எந்தவித தயக்கமும் இல்லாமல் கருத்து பரிமாற்றம் செய்யும் வகையில் நிர்வாகம் இருக்க வேண்டும்

பணியாளர்கள் அனைவருமே வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்திருப்பார்கள் என்பதை நிர்வாகி மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, பன்முகத்தன்மையுடன் ஒரு நிறுவனம் இருக்க வேண்டும் என்பது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்லது

நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது நல்லது

பணியாளர்களின் திறமையை மேம்படுத்த அவ்வப்போது பயிற்சிப் பட்டறைகள் மற்றும் ஊக்குவிப்பு பயிற்சிக்களை ஏற்பாடு செய்யவேண்டும். அதேபோல, பணியாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையிலான விழிப்புணர்வு திட்டங்களையும் செயல்படுத்தலாம்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link