Australia: 2020 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் விருதுகள் அறிவிப்பு

Sun, 07 Feb 2021-3:59 pm,

ஆலன் பார்டர் - ஸ்டீவ் ஸ்மித்: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 2020 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக மதிப்புமிக்க ஆலன் பார்டரைப் பெற்றார்.  

((Photo courtesy/@CricketAus) / Twitter)

பெலிண்டா கிளார்க் விருது (Belinda Clark Award) - பெத் மூனி: ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 2020 ஆம் ஆண்டில் பெலிண்டா கிளார்க் விருதை வென்றார்.  ((Photo courtesy/@CricketAus) / Twitter)

ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் - பாட்  கமின்ஸ் (Pat Cummins): வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் 20.04 சராசரியாக 21 விக்கெட்டுகளுடன் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஆண்கள் டெஸ்ட் வீரர் விருதை வென்றார்.   ((Photo courtesy/@CricketAus) / Twitter)

சமூக சாம்பியன் - ஜேசன் லாலோர்:  Reflect Forward Campaign பிரச்சாரத்தில் பங்களித்ததற்காக சமூக சாம்பியன் விருதை வென்றார் ஜேசன் லாலோர். ஒன் லவ் ஆஸ்திரேலியாவுடன் (One Love Australia) இணைந்து இனவெறி (racism) பற்றி பேச மக்களை ஊக்குவிக்கவும், கல்வி கற்பிக்கவும், அதிகாரம் அளிக்கவும் பணியாற்றினார் Jason Lalor.

 ((Photo courtesy/@CricketAus) / Twitter)

சிறந்த டி 20 வீரர் - ஆஷ்டன் அகர் (Ashton Agar): தனது பந்து வீச்சால் ஆதிக்கம் செலுத்திய   ஆஷ்டன் அகர் ஆண்டின் சிறந்த டி 20 வீரர் என தேர்ந்தெடுக்கப்பட்டார் Ashton Agar! 13 விக்கெட்டுகளுடன், 12.46 என்ற சராசரி விகிதத்தை வைத்திருக்கிறார் ஆஸ்டன். பிப்ரவரி 2020 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய ஆஸ்டன், 5/24  என்ற ஸ்கோரை பதிவு செய்தார்.  ((Photo courtesy/@CricketAus) / Twitter)

ஆண்களுக்கான ஒருநாள் போட்டியில் சிறந்தவர் - ஸ்டீவ் ஸ்மித்: ஆண்கள் பிரிவில், இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆவார். ஸ்மித் ஐந்து அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் உட்பட 63.11 சராசரியாக 568 ரன்கள் எடுத்தார்! ((Photo courtesy/@CricketAus) / Twitter)

மகளிர் டி 20 (மற்றும் ஒருநாள்) ஆண்டின் சிறந்த வீராங்கனை - பெத் மூனி: ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்ற பெத் மூனி இந்த ஆண்டின் மகளிர் டி 20 வீரராக அறிவித்துள்ளார். அவர் ஒருநாள் சிறந்த வீரருக்கான விருதையும் வென்றார். ((Photo courtesy/@CricketAus) / Twitter)

சிறந்த உள்நாட்டு வீரர் விருது - ஷான் மார்ஷ்: ஷான் மார்ஷ் சிறந்த உள்நாட்டு விளையாட்டு வீரருக்கான விருதைப் பெற்றார். 37 வயதான பேட்ஸ்மேன்  அனைத்து வடிவ கிரிக்கெட்களிலும் 1,000 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் ஆவார். ((Photo courtesy/@CricketAus) / Twitter)

 சிறந்த உள்நாட்டு வீராங்கனை- எலிஸ் வில்லானி (Elyse Villani): 

2020 ஆம் ஆண்டில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய எலிஸ் வில்லானி அதிகபட்ச வாக்குகளைப் பெற்றார்! அவர் இந்த ஆண்டின் சிறந்த உள்நாட்டு வீரர் என்ற விருதை வென்றார் ((Photo courtesy/@CricketAus) / Twitter)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link