உலக்கோப்பை: இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் வெற்றி பெறப்போவது யார்?
உலக கோப்பை லீக் போட்டியில் அடுத்ததாக இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 5 ஆம் தேதி மோதுகின்றன
புள்ளிப் பட்டியலில் டாப் இரண்டு இடங்களில் மோதும் போட்டி என்பதால் இப்போட்டி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
இந்திய அணி தோல்வியே சந்திக்காலும், ஒரே ஒரு தோல்வியுடன் தென்னாப்பிரிக்கா அணி வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது
உலக கோப்பையில் இதுவரை 5 முறை இரு அணிகளும் மோதியிருக்கின்றன. அதில் மூன்றில் தென்னாப்பிரிக்காவும், இரண்டில் இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கின்றன
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, 97 ஒருநாள் போட்டியில் இந்தியா 30 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 50 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இருப்பினும் அண்மைக்காலமாக இந்திய அணியே ஒருநாள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடைசியாக மோதிய ஒருநாள் போட்டிகளில் கூட இந்திய அணியே அதிக வெற்றிகளை பெற்றிருக்கிறது.
கூடவே சொந்த நாட்டு மைதானத்தில் விளையாடுவதால் இந்திய அணி கூடுதல் பலத்துடன் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும்
60 விழுக்காடு இந்திய அணிக்கும், 40 விழுக்காடு தென்னாப்பிரிக்கா அணியும் கொல்கத்தா போட்டியில் வெற்றி பெற இப்போதைக்கு வாய்ப்பு இருக்கிறது.