D 50 Title: மொட்டை தலை லுக்கில் தனுஷ்! டி 50 டைட்டில் என்ன தெரியுமா?

Mon, 19 Feb 2024-6:40 pm,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர், தனுஷ். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் சினிமாவின் திறமை மிகு கதாநாயகர்களுள் ஒருவராக உள்ளார். இவரது 50வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

தனுஷ், தனது 51வது படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

தனுஷின் 50வது படத்தில் அவருடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளார். ஏற்கனவே தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், வளர்ந்து வரும் ஹீரோவாக உள்ளார். 

தனுஷுடன் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தவர், சந்தீப் கிஷன். தெலுங்கு நடிகரான இவர், சில தமிழ் படங்களில் நடித்து கவனிக்கத்தக்க ஹீரோவாக உள்ளார். இவரும் தனுஷுடன் அவரது 50வது படத்தில் நடிக்கிறார். 

தனுஷ், தனது 50வது படத்தை தானே எழுதி, இயக்கியுள்ளார். கடைசியாக பா.பாண்டி படத்தை இயக்கிய அவர், அடுத்து இந்த படத்தை இயக்குகிறார். 

தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது. 

D 50 படத்திற்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், தனுஷ் உள்பட மூன்று ஹீரோக்களும் ரத்தக்களரியில் காட்சியளிக்கின்றனர். அதனால், இப்படம் கண்டிப்பாக கேங்ஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link