30 நாட்களில் உங்கள் வாழ்க்கையே பிரகாசமாகும்! ‘இதை’ செய்யுங்கள் போதும்!
அந்த நாள் நன்றாக போய்க்கொண்டிருக்கும், திடீரென்று “நாம் ஏன் இப்படியே இருக்கிறோம்..நம் வாழ்க்கை எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது?” என்று நம்மையே அறியாமல் நமக்கு ஒரு கேள்வி வரும். இதற்கு காரணம், நாம் நீண்ட நாட்களாக நம் வாழ்க்கை குறித்த ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்திருப்போம், ஆனால் அதற்கான வேலைகளை செய்திருக்க மாட்டோம். அப்படி நாம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை மாற்றியமைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Start Today:
“ஒன்றே செய், நன்றே செய், அதை இன்றே செய்” என்று பெரியோர் சொல்லி கேட்டிருப்போம். இது எத்தனை உண்மையான வாக்கியம் தெரியுமா? எந்த விஷயத்தையும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று யோசிக்காமல் அதை இன்றே செய்ய முயற்சி செய்யுங்கள்.
இலகுவான இலக்குகள்:
உங்களால் அடைய முடியும் இலக்குகளை முதலில் நிர்ணயம் செய்யுங்கள். அதை அடைந்தவுடன், அது தரும் உத்வேகத்தை வைத்து பெரிய இலக்குகளுக்கு குறி வையுங்கள்.
நாட் குறிப்பு:
நீங்கள் செய்ய நினைத்ததை எத்தனை நாட்கள் தொடர்ந்து செய்தீர்கள் என்பதை கணக்கிட, அந்த நாட்களை கேலண்டரை குறித்துக்கொண்டே இருங்கள்.
நண்பர்களிடம் கூறுங்கள்:
உங்களுக்கு மிக நெருங்கிய, உங்கள் சாதனையை ஊக்கப்படுத்தக்கூடிய நண்பர்களிடம் மட்டும் உங்கள் ப்ளான் குறித்து கலந்தாலோசனை செய்யுங்கள். அவர்கள், நீங்கள் தொய்வடையும் சமயத்தில் சியர் அப் செய்வர்.
30 நாட்களுக்கும் மேல்...
30 நாட்கள் மட்டுமன்றி, அதையும் தாண்டி உங்களால் அதே சுய ஒழுக்கத்துடன் இருக்க முடிகிறதா என்பதை பரிசோதனை செய்து பாருங்கள்.
கணக்கீடு:
அந்த 30 நாட்களில் உங்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள், உங்கள் வளர்ச்சி பாதையில் எப்பேற்பட்ட முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை கணக்கிடுங்கள். கொஞ்சம் திரும்பி பார்த்தால், 30 நாட்களில் ஆளே மாறிப்போயிருப்பீர்கள்.