Today horoscope 16 march 2021: இன்றைய ராசிபலன்; உங்கள் ராசி என்ன சொல்கிறது?

Tue, 16 Mar 2021-5:59 am,

மேஷம்: சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரியால் பிரச்சினை வரக்கூடும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சவால்களில் வெற்றி பெறும் நாள்.

கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். நல்லன நடக்கும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

கன்னி: உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். அழகும் இளமையும் கூடும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனை தருவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

 

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

தனுசு: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவுகளால் மனஸ்தாபம் வந்து நீங்கும்.பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம்: இங்கிதமாகப் பேசி  எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வராது என்று இருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைசுமையால் கோபப்படுவீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க  வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link