மனதையும் உடலையும் இரும்பு போல ஸ்ட்ராங்கா ஆக்க..தினமும் காலையில் ‘இதை’ பண்ணுங்க!
தியானம்:
மனதை உறுதிப்படுத்திக்கொள்ள, தினமும் காலையில் தியானம் செய்தால் மனம் உறுதி பெறும் என கூறப்படுகிறது.
எழுதுதல்:
காலையில் எழுந்தவுடன், நம் மனதில் உள்ள விஷயங்களை ஒரு ஜர்னலில் எழுத வேண்டும். அப்போதுதான் உங்களின் மனம் தெளிவாகும்.
தினசரி டாஸ்க்:
நீங்கள் ஒரு நாளில் என்ன செய்ய நினைக்கிறீர்கள் என்பதை தினமும் எழுத வேண்டும். அந்த நாளின் இறுதியில் அவற்றை முடித்துள்ளீர்களா என்று பாருங்கள்
நன்றியுணர்வு:
தினமும் உங்கள் கையில் ஏற்கனவே இருக்கும் விஷயங்கள் குறித்து நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். அப்போதுதான், உங்களுக்கு தேவையானவை கைக்கு வந்து சேரும்.
உடற்பயிற்சி:
தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் எண்டார்ஃபின்ஸ் ஹார்மோன்கள் சுரக்கிறது. இதனால், மனம் தெளிவடைகிறது.
எதிர்மறை எண்ணங்கள்:
உங்களுக்குள் நீங்கள் அதிகமாக பேசிக்கொள்ளும் நெகடிவான விஷயங்களை குறைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நீங்களே பெரிய நண்பராக இருந்து, உங்கள் எண்ண அலைகளை சரிசெய்ய வேண்டும்.
பிறருடன் பேசுவது:
உங்களுக்கு பிடித்தவர்கள், உங்களுடன் இருப்பவர்கள் என அனைவருக்கும் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள். இது, உங்களுக்கு தனிமை உணர்வை தராமல் இருக்கும்.
ஓய்வு:
உங்கள் உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு தேவைப்படும் என்று தோன்றும் போது, ஓய்வு எடுப்பது அவசியம் ஆகும்.