சனிப் பெயர்ச்சி இன்று, சனியின் பிடியில் சிக்கும் 5 ராசிகள்
சனிப் பெயர்ச்சி 2023: சனி பகவானின் பெயர்ச்சி ஜோதிடத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதன் படி இன்று முதல் 2025 மார்ச் 29ம் தேதி வரை அடுத்த இரண்டரை ஆண்டுகள் கும்ப ராசியில் அமர்ந்து சனி எந்தெந்த ராசிக்கெல்லாம் பாடம் புகட்டப்போகிறார் என்பதை பார்ப்போம்.
30 ஆண்டுக்கு பின் கும்பத்தில் சனி: நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி. ஏனெனில் 12 ராசிகளை சுற்றி வர சனிக்கு 30 ஆண்டு காலம் எடுக்கிறது. அந்த வகையில் சனி பகவான் மகரத்திலிருந்து கும்ப ராசியில் ஆட்சி பெற்றுகிறார். சனி பகவான் கும்பத்தில் சஞ்சரிப்பதால் ஷஷா யோகம் உருவாகும்.
கடக ராசி: அஷ்டம் சனி ஆரம்பிக்கிறது. ஆரோக்கியத்தில் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நிதி நிலையில் அதிக ஏற்ற, இறக்கங்கள் சந்திக்க நேரிடும். நலம் விரும்பிகள், துறை வல்லுநர்களிடம் ஆலோசித்து முதலீடு செய்யவும். செலவு அதிகரிக்கும்.
சிம்ம ராசி: கண்ட சனி ஏற்படுகிறது. திருமண வாழ்க்கையில் மன வருத்தம் ஏற்படலாம். தொழில் செய்யக்கூடியவர்கள் உங்களின் கூட்டாளிகள், ஒப்பந்ததாரர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காத நிலை இருக்கும். உத்தியோகத்தில் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியது இருக்கும்.
விருச்சிக ராசி்: அர்த்தாஷ்டமச் சனி காலமாகும். குடும்பத்தில் பூர்வீக சொத்து சார்ந்த விஷயங்களில் பிரச்னைகளும், மன வருத்தமும் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இதயம் மற்றும் மார்பு தொடர்பான நோய்கள், சில உடல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மகர ராசி: பாதசனி நடக்க உள்ளது. சுய மரியாதை பாதிக்கப்படலாம். இந்த காலத்தில் உங்களுக்கு சிறு சிறு உடல் நலக் கோளாறுகள் இருந்து கொண்டே இருக்கும். வேலையில் கவனக்குறைவாகச் செயல்பட வேண்டாம்.
கும்ப ராசி: 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியாக்குகிறார். இதனால் மன ரீதியாக பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நிதி நிலைமை பெரியளவில் பாதிக்கப்படும்.
மீன ராசி: மீன ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது. தேவையற்ற விரயங்கள், செலவுகள் செய்ய நேரிடும். இந்த காலத்தில் உங்களின் தொழில், வியாபாரத்தில் லாபம் இல்லாத நிலை அல்லது நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.