Delhi MCD Winner: தாமரையை துடைப்பத்தால் துடைத்தெடுத்த ஆம் ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால்
டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 126 இடங்களை கைப்பற்றியது. முதல் திருநங்கை வெற்றியாளர் பாபி
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மணிஷ் சிசோடியா இது "வெற்றி மட்டுமல்ல" என்றும் "இது ஒரு பெரிய பொறுப்பு" என்றும் கூறியுள்ளார்.
புதிய எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இது என்பதால், இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றது.
இதற்கு முன்னதாக, டெல்லியில் மொத்தம் 272 வார்டுகள் இருந்தன. NDMC, SDMC மற்றும் EDMC என மூன்று பிரிவுகளாக டெல்லி உள்ளாட்சி அமைப்பு செயல்பட்டுவந்தது.
முந்தைய MCD, 1958 இல் நிறுவப்பட்டது. 2012ல் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது மூன்றாக பிரிக்கப்பட்டது. அவை மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன