ரயில் விபத்துக்கான காப்பீடு... 45 பைசாவிற்கு ரயில் பயணக் காப்பீடு... முழு விபரம்..!!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பயணிகளுக்காகப் பயணக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. இது பயணத்தின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் காயங்களுக்கு எதிராக நிதி பாதுகாப்பு அளிக்கிறது. இந்த காப்பீடு பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்
ரயில் பயணக் காப்பீடு பெறும் முறை: www.irctc.co.in என்ற இணையதளத்தில் உள்ள NGeT இணையதள செயலி அல்லது ஐஆர்சிடிசி மொபைல் ஆப் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் போது, ரயில் பயணக் காப்பீடு பெற விருப்பப்படும் பயணிகள், காப்பீடுக்கான தேர்வு பெட்டியைக் டிக் செய்ய வேண்டும்.
காயமடைந்த அல்லது பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இந்த பாலிசியின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகை, அவர்களின் பாதிப்பிற்கு ஏற்ப காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இது குறித்த தகவல்கள் பலருக்கு தெரியாமல் உள்ளது என்பதே உண்மை நிலை.
அனைத்து ரயில் பயனிகளும் சிறப்பு ரயில் பயணக் காப்பீடு பெற தகுதியுடையவர்கள் ஆவர். இந்த காப்பீடு அனைத்து வகுப்பு ரயில் பயணங்களுக்கும் பொருந்தும் என்றாலும், இது முழுக்க முழுக்க விருப்பத் தேர்வு தான். அதாவது, ரயில் பயணிகள் விருப்பம் இருப்பின் அதை வாங்கலாம் அல்லது மறுத்துவிடலாம். இதற்கான ஆப்ஷன் டிக்கெட் புக் செய்யும் போது கொடுக்கப்படும்
ஐஆர்சிடிசி தளத்தில் உள்ள தகவலில், 45 பைசா பயணக் காப்பீடு வைத்திருக்கும் ஒரு பயணி ரயில் விபத்தில் இறந்தால், அந்த பயணியின் குடும்பத்திற்கு (நாமினி) ரூ.10 லட்சம் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
விபத்தில் பயணிகளுக்கு ஏற்பட்டமுமையான ஊனம் நிரந்தரமாக இருந்தாலும், 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். நிரந்தர பகுதி ஊனம் இருந்தால் 7,50,000 ரூபாய் வழங்கப்படும். இது தவிர, காயம் ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுக்கு ரூ.2,00,000 வழங்கப்படும்.
ரயில் பயணக் காப்பீட்டின் காலம்: இந்திய ரயில்வே துறை அளிக்கும் 0.35 பைசா மதிப்பிலான காப்பீடு, ரயில் புறப்படும் நேரத்திலிருந்து டிக்கெட் புக்கிங் செய்யப்பட்ட இடத்திற்கு சென்றடையும் வரையிலான பயண நேரம் வரையில் தான் இந்த காப்பீடு செல்லுபடியாகும்.
ரயில் பயணக் காப்பீடு கிளைம் செய்யும் முறை: காப்பீடு செய்யப்பட்ட பயணி அல்லது அவரது நாமினி ஆகியோரில் யாரேனும் ஒருவர் காப்பீடு சான்றிதழ், மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஆதார் ஆவணங்கள் போன்ற தேவையான ஆவணங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பித்து காப்பீட்டை கிளைம் செய்யலாம்
ரயில் விபத்துக்களுக்கு எதிரான காப்பீட்டை பெற, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 45 பைசா செலுத்தி பயணக் காப்பீட்டு பாலிஸியை வாங்கிக் கொள்ளலாம். ரயில் விபத்துகளின் போது, இறந்த போனவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு தொகை கிடைக்கும். இது தவிர காயமடைந்தவர்களுக்கும் காப்பீட்டு தொகை கிடைக்கும்.