இந்த மாதம் அறிமுகமாகும் MG ZS EV 2022 எலக்ட்ரிக் கார்
MG ZS EV 2022 பல புதிய மாற்றங்களுடன் வருகிறது. மிக முக்கியமான மாற்றமாக முன்புறம் மூடப்பட்ட கிரில் அமைப்பைப் பெறுகிறது, விளக்குகளும் நேர்த்தியாக உள்ளன.
முன்புற வடிவமைப்பு
MG ZS EV 2022 சென்சார்களுடன் வரும், மேலும் டாப் வேரியண்ட் ADAS லெவல் 2 ஐப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அறிமுகமாகும் காரின் உட்புறத் தோற்றம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஏற்கனவே இருக்கக்கூடிய சிறப்பான ஈர்க்கக்கூடிய அம்சங்களில் மேலும் சில அதிகரிக்கும் என உறுதியாக நம்பலாம். MG ZS EV ஆனது 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவுடன் வரும்.
MG ZS EV 2022 சில உலகளாவிய சந்தைகளில் தற்போதும் கிடைக்கிறது. அவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 440 கிமீ தூரம் செல்கின்றன.
MG ZS 2022 வேகமான சார்ஜிங் வேகத்தைப் பெறும். சந்தைகளில் விற்பனையாகும் பிற எலக்ட்ரிக் கார்கள் 1 மணி நேரம் 3 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடுகின்றன. சார்ஜ் செய்யப்படும் நேரமானது DC 50kW ரேபிட் சார்ஜரை அடிப்படையாகக் கொண்டது.