சுகர் லெவலை கட்டுப்படுத்தும் ‘மேஜிக்’ மசாலாக்கள் இவைதான்
![நீரிழிவு நோய் Diabetes Control Tips: Diabetes](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/10/12/327559-diabetes1-5.jpg?im=FitAndFill=(500,286))
நீரிழிவு நோயால், உலகெங்கிலும் உள்ள பலர் பாதிக்கப்படுகிறார்கள். நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
![பல கட்டுப்பாடுகள் Diabetes Control Tips: Many Restrictions](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/10/12/327558-diabetes2-5.jpg?im=FitAndFill=(500,286))
பலர் தங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாழ்கிறார்கள். ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை மிகவும் கடினமாகிறது. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை அவர்கள் கடைபிடிக்க வெண்டி உள்ளது.
![இரத்த சர்க்கரை அளவு Diabetes Control Tips: Sugar Level](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/10/12/327557-diabetes3-4.jpg?im=FitAndFill=(500,286))
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தங்கள் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் உடல்நிலை மோசமடையக்கூடும். மேலும் இதனால் சிறுநீரகம் மற்றும் இதய நோய் அபாயம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
நம் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் சில மசாலா பொருட்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெந்தய நீரை தினமும் குடித்து வந்தால், அது டைப்-2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். இந்த மசாலாவில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த நிரை குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மஞ்சளில் குர்குமின் எனப்படும் ஒரு சேர்மம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. இந்த மசாலாவில் ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
மல்லி விதைகள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகின்றன என்பதும், இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைப்பு செயல்முறையை மேம்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதும் பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தனியாவை சாப்பிடுவது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை ஒரு சிறந்த தீர்வாக அமையும். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேர்வதையும் அனுமதிக்காது. இதன் மூலம் அதிகபட்ச நன்மை பெற, ஒரு கிளாஸ் பாலை சூடாக்கி, அதில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்த்து குடிக்கவும்.