சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க... காலை உணவில் சேர்க்க வேண்டியவை..!!
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால், கண்கள், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இதய, ஆகியவை மோசமாக பாதிக்கப்படலாம். எனவே, உணவு கட்டுப்பாடு அவசியம். அதோடு, உங்கள் காலை உணவு மிகவும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம்.
நீரிழிவு நோயாளிகள் அரிசி கோதுமைக்கு பதிலாக, சிறு தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், அதிக அளவு நார்ச்சத்து, பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இதன் நுகர்வு உடலின் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. காலை உணவில் இதனை சேர்ப்பதன் மூலம் இரத்த சர்க்கரையை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
மீன் உணவுகள்: பல தவறான புரிதல்களால், பல நீரிழிவு நோயாளிகள் மீன் சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். மீன்களில் உள்ள புரதம் நாள் முழுவதும் ஆற்றலை வழங்கும். அதோடு, நீரிழிவு நோயாளிகளுக்கு வைட்டமின் டி அளவு குறைகிறது. எனவே, உங்கள் உணவில் மீனை சேர்ப்பதன் மூலம் உடலில் உள்ள வைட்டமின் டி குறைபாட்டை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.
பூண்டை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம். பூண்டின் கிளைசெமிக் குறியீடு 10-30 மட்டுமே. இதனை தினமும் உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பது மட்டுமின்றி. இதய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் இது கெட்ட கொல்ஸ்ட்ராலை எரிக்கிறது.
ஆப்பிள் சைடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது. இது வயிற்றில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்சைம்களை குறைக்க உதவுகிறது. இதை தினமும் உட்கொள்வதால் உங்கள் உடலின் இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கும். தினமும் சுமார் 20 மில்லி ஆப்பிள் சைடர் வினிகரை (அதாவது 4 டீஸ்பூன்) 40 மில்லி தண்ணீருடன் எடுத்துக் கொண்டால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
பச்சை இலைக் காய்கறிகளில் நார்ச்சத்து, மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும், காய்கறிகளின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு. எனவே, தினமும் காலை உணவில் உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
சியா விதைகளில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், ஒமேகா-3, கால்சியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் கொண்ட இந்த இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் நாள் முழுவதும் ஆற்றல் அபரிமிதமாக இருக்கும்.
பாதாம் பருப்புகளை உட்கொள்வது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாதாமை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள பீட்டா செல்கள் தூண்டப்பட்டு, கணையத்தில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கிறது. இது உடலில் இன்சுலின் உணர்திறனை உருவாக்குகிறது. இதனால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.