நீரிழிவை ஒழித்துக் கட்டும் ‘இன்சுலின் செடி’ இலை! பயன்படுத்துவது எப்படி!
உடலில் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் பல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும், இதை நீரிழிவு நோய் என்று அழைக்கிறோம். நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாத போது உடலில் இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும். உடல் உறுப்புகளை பாதிக்க செய்யும்.
இன்சுலின் என்பது கணையத்தில் இருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். இது நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதாவது குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. .நீரிழிவு நோய்க்கான சிகிச்சையின் போது, உடலில் இன்சுலின் அளவை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. தீவிர நோய் உள்ள சிலருக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்படுகிறது.
இயற்கையான முறையில் இன்சுலின் அளவையும் அதிகரிக்கலாம். அதற்கு உதவும் அத்தகையை ஒரு செடி தான் இன்சுலின் செடி. இன்சுலின் உற்பத்தியை பெருக்குவதால், இது இன்சுலின் செடி என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இன்சுலின் செடி என்று அழைக்கப்படும் இதில் இன்சுலின் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.
ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல மூலிகைகள் கடுமையான நோய்களையும் தீர்க்கும் சக்தி கொண்டது. அதில் ஒன்று Costus igneus என்று அழைக்கப்படும் இன்சுலின் செடி. இது உடலில் இன்சுலின் போல் செயல்பட்டு சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஒரு தாவரமாகும்.
தினமும் ஒன்று அல்லது இரண்டு இன்சுலில் செடியின் இலைகளை மென்று சாப்பிடுவது சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரையை கிளைகோஜனாக மாற்றும் சில நொதிகள் இதில் உள்ளன இதன் காரணமாக இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
இன்சுலின் செடி இலைகளை உலர்த்தி பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் பொடி சாப்பிடுவதும் சர்க்கரை நோய்க்கு பலன் தரும். காஸ்டஸ் இக்னியஸ் என்ப்படும் இன்சுலின் செடி இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் உள்ளதோடு, சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
இன்சுலின் செடியில் புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், அஸ்கார்பிக் அமிலம், இரும்பு, டெர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், பி-கரோட்டின் மற்றும் கார்சோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. நீரிழிவு தவிர, இது நுரையீரல், செரிமானம் மற்றும் கண்களுக்கும் நன்மை பயக்கும்.
பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.