சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... வேப்பிலைகளை ‘இந்த’ முறையில் சாப்பிடுங்க..!!
சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் மிகவும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவைச் சேர்த்துக் கொண்டு முடிந்தவரை இனிப்புகளைத் தவிர்க்கவும். உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக கொள்ள வேண்டும். அதனுடன் சில வீட்டு வைத்தியங்களையும் கடைபிடித்தால், சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் உணவில் முடிந்த அளவு பச்சை காய்கறிகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். இதனுடன் வேப்ப இலைகளையு மருந்தக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகரிக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் வேப்ப இலைகள் பயனுள்ளதாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் வேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்க்கு வேப்ப இலைகள்: வேப்ப இலையில் உள்ள கிளைகோசைடுகள் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. கூடுதலாக, இது உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
கசப்பான வேப்ப இலைகள் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். கசப்பு தன்மை காரணமாக அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். அதோடு இவற்றில் ஃபிளாவனாய்டுகள், ட்ரைடர்பெனாய்டுகள், வைரஸ் எதிர்ப்பு கலவைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ளன.
சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் 6 முதல் 7 வேப்ப இலைகளைச் சாப்பிடலாம். இது சர்க்கரையின் அளவைக் குறைக்கும், நீங்கள் விரும்பினால், வேப்பிலையை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு அவற்றை சிறிது வெதுவெதுப்பான நீரில் சேர்த்து அருந்தலாம்.
வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தலாம். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை நீர் குடிப்பது கஷ்டம் என்றாலும் உடல் நலனில் ஏற்படுத்தும் நன்மைகளையும் நாம் கருத்தில் கொண்டாக வேண்டும். அதில் ஆண்டிஆக்ஸிடன்ட்களும், அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்திருக்கின்றன.
வேப்ப இலைகளின் கஷாயத்தை தயாரித்தும் சாப்பிடலாம். அரை டீஸ்பூன் வெந்தயப்பொடி, அரை டீஸ்பூன் கருப்பட்டி, அரை டீஸ்பூன் வேப்பிலை பொடி ஆகியவற்றைக் கலந்து கஷாயம் தயாரிக்கவும். இப்போது இந்த கஷாயத்தை தினமும் காலையில் உட்கொள்ளுங்கள். இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.