பொங்கல் சிறப்பு தொகுப்பு: 1000 ரூபாய் கொடுக்கப்படாதது ஏன் தெரியுமா?

Sun, 29 Dec 2024-8:21 pm,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு (Pongal Special Gift Pack) வழங்கப்படுவது வாடிக்கையாகும். கடந்தாண்டு 2024 பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கமாகவும் வழங்கப்பட்டது. 

 

ஆனால், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு (Pongal 2025) ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மட்டும் வழங்கப்படும் என நேற்று தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) அறிவித்துள்ளது. இந்த தொகுப்பில் கடந்தாண்டை போல 1000 ரூபாய் ரொக்கத்தொகை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு சென்னை மட்டுமின்றி தென்மாவட்டங்களிலும் மழை வெள்ளம் பிரச்னை இருந்தபோதும், மழை நிவராணத் தொகை, பொங்கல் தொகுப்பு தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஆகியவை வழங்கப்பட்டன. ஆனால், இம்முறை அரசு பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கப்படாதது ஏன் என மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தன. 

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் பரிசு பொருள்களுடன் 1000 ரூபாய் வழங்கப்படாதது ஏன் என்பது குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு (TN Minister Thangam Thennarasu) பதில் அளித்துள்ளார். 

 

"கடந்தாண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவு செய்தோம். மத்திய அரசிடம் பேரிடர் நிதிக்காக சுமார் ரூ.37 ஆயிரம் கோடி கேட்டிருந்தோம். ஆனால், மத்திய அரசு வெறும் ரூ.276 கோடி மட்டுமே கொடுத்தது" என்றார் தங்கம் தென்னரசு.

தொடர்ந்து அவர்,"மத்திய அரசிடம் அதிகம் கேட்டாலும் சொற்பமாகத்தான் கிடைத்தது. நிதிச்சுமையை தமிழ்நாடு அரசு ஏற்றது. பேரிடர்களுக்காக மாநில நிதியில் இருந்தே செலவிட்டிருக்கிறோம்" என்றார்.

பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகி உள்ளது என்றும் நல்ல சூழல் விரைவில் உருவாகும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், மகளிர் உரிமைத்தொகையான 1000 ரூபாயை பொங்கலுக்கு முன்பாக வழங்க பரிசீலித்து வருகிறோம் என்றார்.

கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்னரே மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அவ்வாறே வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link