தொப்பை கரைய வேண்டுமா; டயட்டில் இவற்றை சேர்க்கவும்!

Tue, 06 Sep 2022-7:39 pm,

இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு அதிகரிப்பதற்கு உள்ளுறுப்பு கொழுப்பு காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதன் காரணமாக, உடலின் ஹார்மோன்கள் சமநிலையற்றதாக இருக்கும். இதற்கு சில தாவர உணவுகள், ஆரோக்கியமான கொழுப்புகள், கொழுப்பை கரைக்கும் பானங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிடுவதன் மூலம், தொப்பை கொழுப்பை கரைத்து மெலிதான இடையை பெறலாம்.

பழங்கள்: ஆரஞ்சு, பேரிக்காய், பெர்ரி, ஆப்பிள், வாழைப்பழங்கள் உடல் எடையை குறைக்கும். அதோடு பிரெஷ்ஷான பானங்களும் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.

காய்கறிகள்: ப்ரோக்கோலி, கேரட்,  பச்சை காய்கறிகள், கீரை வகைகள் தொப்பையை குறைக்க பெரிதும் உதவும்.

தொப்பையை குறைக்க, லேசான உடற்பயிற்சி செய்வதும் அவசியம், உடல் பயிற்சியை அதிகப்படுத்தினால், உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இதனுடன், உணவில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்க வேண்டும், இல்லையெனில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இது உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link