ராகு, செவ்வாய் பெயர்ச்சி... தீபாவளி முன் இந்த 3 ராசிக்கு லாட்டரி காத்திருக்கு!
)
Rahu Mars Transit 2024: ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக ராகு பார்க்கப்படுகிறது. உஙகள் ஜாதகத்தில் ராகுல் சரியான இடத்தில் நீங்கள் ராஜா போல் இருப்பீர்கள். அதுவே எக்குத்தப்பாக இருக்கும்பட்சத்தில் தெருக்கோடிக்கு கூட வந்துவிட வாய்ப்பு உள்ளது.
)
இந்நிலையில் தீபாவளிக்கு முன்னர் ராகுவும், செவ்வாயும் வெவ்வேறு ராசிகளுக்கு பெயர்ச்சி ஆகிறது. இந்த இரு ராசிகளின் பெயர்ச்சியால் இந்த தீபாவளி (Diwali 2024) காலத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் மகிழ்ச்சி நிறைந்துவழியும்.
)
இருப்பினும் ராகுவும் (Rahu), செவ்வாயும் பெயர்ச்சி (Mars Transit 2024) ஆவதால் தீபாவளி இந்த 3 ராசிக்காரர்களுக்கு கூடுதல் சிறப்பானதாக அமையும். அதாவது, இந்த 3 ராசிக்காரர்கள் எதிர்பாராத நன்மைகள் பலவற்றை தீபாவளிக்கு முன்னரே பெறுவார்கள். இதனால் தீபாவளி சிறப்பானதாக அமையும்.
செவ்வாய் கடந்த அக். 20ஆம் தேதி கடகத்தில் பெயர்ச்சி ஆனது. ராகுல் தற்போது மீனத்தில் உள்ளன. இதனால் நவபஞ்சம் ராஜயோகம் (Navapancham Raj Yoga) உண்டாகும். தற்போது ராகு - செவ்வாய்யின் இணைதல் என்பது இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மையை அளிக்கும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு ராகுல் நல்ல நிலையில் இருப்பதால் அவர்களின் திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். எதிரிகளை வீழ்த்தி சமூகத்தில் மதிப்பை உயர்த்திக்கொள்வீர்கள். புதிய வேலையையோ, வியாபாரத்தையோ தொடங்கலாம். வீட்டுக்கு புதிய வாகனமோ அல்லது புதிய சொத்த வரலாம்.
மிதுனம்: நவபஞ்ச ராஜ யோகம் என்பது மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக நன்மையை வழங்கும். இந்த பெயர்ச்சி வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டுவரும். உங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். பணியிடத்தில் வளர்ச்சி இருக்கும். நீண்ட நாள்களாக வராமல் இருந்த பணம் உங்களை வந்து சேரும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும்.
ரிஷபம்: இந்த யோகத்தால் இவர்களின் வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்திலும் வளர்ச்சி அதிகம் இருக்கும். நீங்கள் முன்னர் செய்த முதலீட்டில் நல்ல வருமானம் கிடைக்கும். வீட்டில் யாருக்காவது நீண்ட நாள்களாக வரன் தேடி வந்தால் இப்போது நல்ல இடம் உங்களை தேடி வரும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கை மற்றும் ஊடக தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.