Diwali Gift: ₹1,500க்கும் குறைவான விலையில், அசத்தலான தீபாவளி பரிசுகள்
ரீசார்ஜ் செய்யக்கூடிய LED விளக்கை 28% தள்ளுபடிக்கு பிறகு Mi இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் அசல் விலையான ரூ.1,799க்கு எதிராக ரூ.1,299க்கு வாங்கலாம். இதனை ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும், ஐந்து நாட்களுக்கு உங்களுக்கு வெளிச்சத்தை அள்ளிக் கொடுக்கும்.
ரியல்மீ வழங்கும் போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர்களை ரூ.1,399க்கு Flipkart இலிருந்து வாங்கலாம். இந்த ஸ்பீக்கருக்கு IPX5 ரேட்டிங்கும் கிடைத்துள்ளது, அதாவது தண்ணீர் புகுந்தால் கூட பழுதாகாது.
உங்கள் அன்புக்குரியவர்கள் வொர்க் ப்ரம் ஹோம் எடுத்துக் கொண்டிருந்தால், அல்லது மடிக்கணினிகளை அதிகம் பயன்படுத்தினால், அவர்களுக்கு வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் கொடுப்பது சிறந்த பரிசாக இருக்கும். அமேசானில் டெல் நிறுவனத்தின் வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் காம்போவை ரூ.1,119க்கு வாங்கலாம்.
Xiaomiயின் 20,000mAh பவர் பேங்கை ஜியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.1,499க்கு வாங்கலாம். நீங்கள் விரும்பினால், குறைந்த திறன் கொண்ட, 10,000mAh பேட்டரி கொண்ட பவர் பேங்கையும் வாங்கலாம், அதன் விலை ரூ.899.
இந்த BoAt இயர்போன்களை Flipkart தளத்திலிருந்து வெறும் ரூ.499க்கு வாங்கலாம். இவற்றில் ஒரு மைக்கும் உண்டு. பல வண்ணங்களில் கிடைக்கிறது.