உங்கள் குழந்தைக்கு இந்த பழக்கத்தை மறக்காமல் சொல்லி கொடுங்கள்!
எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை நல்லவராக தான் வளர்க்க முயற்சி செய்கின்றனர். மற்றவர்கள் அவர்களை பாராட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்கு சிறு வயதில் இருந்தே சிலவற்றை சொல்லி கொடுக்க வேண்டும்.
யாராவது பேசி கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு இடையில் சென்று பேசுவது தவறு என்று சொல்லி கொடுங்கள். அப்படி அவசரமாக பேச வேண்டும் என்றால் அனுமதி கேட்டு பேச சொல்லுங்கள்.
மற்றவர்களின் பொருட்களை அனுமதியின்றி எடுப்பது அல்லது பயன்படுத்துவது தவறு என்று சிறு வயதிலேயே புரிய வைப்பது நல்லது. இது பின்னாளில் பல விஷயங்களில் அவர்களுக்கு உதவும்.
ஒரு பொருளை எடுத்தால் எடுத்த இடத்தில் மீண்டும் வைக்க சொல்லி கொடுங்கள். பொம்மை, புத்தகங்கள், சாப்பிட தட்டு என அனைத்திலும் ஒழுக்கத்தை கொண்டு வாருங்கள்.
குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை கவனிப்பதும் பகிர்ந்து கொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லி கொடுங்கள். உணவுகள், பொம்மைகள் போன்றவற்றைத் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கற்று கொடுங்கள்.
குழந்தைகளுக்கு பொறுமையை கற்று கொடுக்க சிறந்த வழி பெற்றோர்கள் முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். ஷாப்பிங் செய்யும்போது, உணவு கவுண்டரில் வரிசையில் நின்று புரிய வையுங்கள்.
அனைவரிடமும் மரியாதையுடன் பேச சொல்லி கொடுங்கள். சிறு வயதிலேயே இதனை கற்று கொடுக்க வேண்டியது அவசியம்.