முதுகுவலி பாடாய் படுத்துகிறதா... ‘இந்த’ உணவுகளை தவிர்க்கவும்!!
முதுகுவலி என்பது தலைவலியை போல சர்வ சாதாரண பிரச்சனையாகி விட்டது. தொடர்ந்து அலுவலகத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்படுகிறது. உணவே மருந்து என்று மக்கள் பலமுறை சொல்லக் கேட்டிருப்பீர்கள். நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சில உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். ஆனால் சில பிரச்சனைகளில், குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பிரச்சனை அதிகரிக்கிறது. எனவே அவற்றிலிருந்து விலகி இருப்பது முக்கியம்.
அதிகப்படியான உப்பு உட்கொள்வது, பல நோயாளிகளுக்கு, குறிப்பாக முதுகு வலி அல்லது கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வீக்கம் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளும் பாடாய் படுத்தும். அதனால்தான் மூட்டுவலி உள்ளவர்கள் அதிக அளவு உப்பு கொண்ட உணவைத் தவிர்க்க வேண்டும்
உங்களுக்கு முதுகுவலி இருந்தால், அதிக சர்க்கரை உள்ள பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். இனிப்பு சாப்பிடுவது வீக்கத்தை அதிகரிக்கிறது.
சிவப்பு இறைச்சி புரதத்தின் வளமான மூலமாகும். ஆனால், உங்களுக்கு முதுகுவலி பிரச்சனை இருந்தால், சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கும். neu5gc எனப்படும் ஒரு பொருள் சிவப்பு இறைச்சியில் காணப்படுகிறது. இது வீக்கத்தை ஏற்படுத்தும்.
முதுகு வலி இருந்தால் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். பால் பொருட்களை சாப்பிடுவதால் வீக்கம் ஏற்படலாம். லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பால் உணவை ஜீரணிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை சாப்பிடுவது வீக்கம் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தும். இதனை சமையலில் பயன்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.