Army பணிக்கு ஆட்சேர்ப்பு தொடங்குகிறது, விவரங்கள் வேண்டுமா?

Thu, 21 Jan 2021-2:28 pm,

இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு நல்ல செய்தி, பல்வேறு ராணுவ பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக இந்திய ராணுவத்தால் ஆட்சேர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணிகள் மார்ச் 20 முதல் மத்திய பிரதேசத்தில் தொடங்கவிருக்கிறது. ஆக்ரா-மால்வா, அலிராஜ்பூர், பர்வானி, புர்ஹான்பூர், தேவாஸ், தார், ஜாபுவா, காண்ட்வா, கார்கோன்,  நீமுச், ரத்லம், ஷாஜாபூர் மற்றும் உஜ்ஜைன் மாவட்டங்களில் நடைபெறும். இந்திய ராணுவத்தின் இந்த ஆட்சேர்ப்பு பேரணியில் மத்திய பிரதேசம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இந்த ஆட்சேர்ப்பு பேரணி மார்ச் 20 முதல் மார்ச் 30 வரை நடைபெறும்.

 

பேரணி தேவாஸின் குஷாபாவ் தக்ரே மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலியான பணியிடங்கள்: இந்த ஆட்சேர்ப்பு பேரணியின் மூலம், இந்திய ராணுவம் சிப்பாய், சிப்பாய் (பழங்குடியினருக்கானது), சிப்பாய் எழுத்தர், கடைக்காரர், சிப்பாய் (தொழில்நுட்பப் பிரிவு) உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு இளைஞர்களை நியமிக்கும்.

தேர்வு நடைமுறை: இந்த ஆட்சேர்ப்பில் பங்கெடுக்க விரும்பும் இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை தேர்வுகள் இவை தான். உடல் பரிசோதனை, எழுத்துத் தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு. மூன்று நிலையிலும் தேறியவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பட்டியலில் இடம் பெறுவார்கள். அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல், ராணுவ ஆட்சேர்ப்புத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படும்.     கூடுதல் தகவல்களுக்கு ராணுவ ஆட்சேர்ப்புத் துறையின் வலைதளத்தில் இருந்து உதவியைப் பெறலாம்.

16 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். முறையான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகும்போது கூடுதல் தகவல்களும் சேர்க்கப்படலாம்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link