Street Foods: பல நூற்றாண்டுகளாக மிகவும் பிரபலமான வாரணாசி உணவுகள் இவை..

Mon, 05 Apr 2021-7:30 pm,

லிட்டி சோகா அல்லது பட்டி சொக்கா என்பது வாரணாசியில் மிகவும் விரும்பப்படும் தெரு உணவுகளில் ஒன்றாகும். இது பீகாரிலும் பிரபலமானது. கோதுமை மாவில் குட்டி பூரி செய்து, அதில் கத்திரிக்காய், உருளைக்கிழங்குடன் பல்வேறு மசாலாப் பொருட்களுடன் கலக்கப்படுகிறது. இதில் அதிக காரம் இருக்காது, செரிமாணமும் எளிதில் ஆகும்.

சூடான கச்சோரி சப்ஜி வாரணாசியில் மிகவும் பிரபலமான காலை உணவு ஆகும். கச்சோரியில் பெரியது, சிறியது என இரண்டு வெவ்வேறு வகைகள் உள்ளன. பெரிய வகை கச்சோரிகள் பயறு வகையுடன் மசாலா சேர்த்து செய்யப்படுகிறது. சிறிய வகை கச்சோரி ஒரு காரமான உருளைக்கிழங்கு கலவையால் செய்யப்படுகிறது. இது சிறந்த காலை உணவு என்பதை சாப்பிட்டுப் பார்த்தல் தானே தெரியும்?

 

சூரா மட்டர் என்பது வித்தியாசமான சுவை கொண்டது. காசியில் பிரபலமான இந்த சிற்றுண்டி அவலினால் செய்யப்பட்டதுப் போல இருக்கும். சுத்தமான நெய்யில் அவலுடன் பல்வேறு மசாலாப் பொருட்களுடன் புதிய பச்சை பட்டாணி, பால் அல்லது கிரீம் சேர்க்கப்படுகிறது. இறுதியில் திராட்சையும் குங்குமப்பூவும் இதில் சேர்க்கப்படுகின்றன. சூரா மட்டரை சூடான மசாலா சாயுடன் சாப்பிடுவது சிறந்த காம்போ!

இது வாரணாசியில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். இந்த பிரபலமான உணவை வாரணாசியில் கிடைக்கும். காரமும் இனிப்பும் கலந்த இந்த தெருவோர கடைகளில் விற்பனையாகும் சிற்றுண்டியை பார்த்தாலே வாயில் எச்சில் ஊறும். இது சாட் பாப்டி போன்றே இருக்கும். ஆனால் ஒரே வித்தியாசம் என்னவென்றால், இது பாப்டிக்கு பதிலாக மெல்லிய மற்றும் மிருதுவான கோல் கப்பாக்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.  

பிரபலமான பனாரசி தண்டாய் அந்தந்த பருவங்களில் கிடைக்கு பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனுடன் லஸ்ஸி எனப்படும் இனிப்பு கலந்த தயிர் எல்லா தெருக் கடைகளிலும் காலை முதல் இரவு வரை கிடைக்கும். இது மண் குவளையில் பரிமாறப்படுகிறது ரோஜா குல்கந்துடன் இணைந்து கவர்ச்சியாக காணப்படும் தண்டாய் பருகப் பருக பரவசமூட்டும்!

பனராஸில் பான் என்பது அன்பு, மகிழ்ச்சி மற்றும் விருந்தோம்பலின் அடையாளமாகும். அஸ்கா கொட்டைகள், புதிய வெற்றிலை, புகையிலை, சுண்ணாம்பு ஆகியவை கலந்த பீடா. இதில் ரோஜா குல்கந்து, வெள்ளி படலம் போன்ற சில விசேஷமான பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ஒருமுறை பனாரஸில் பீடா சாப்பிட்டால், வேறு எங்கு அதை சாப்பிட்டாலும் பிடிக்காமல் போய்விடும்.  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link