ரயிலில் கொடுக்கப்படும் போர்வைகள் எத்தனை நாளுக்கு ஒரு முறை துவக்கப்படும் தெரியுமா?
ரயிலில் ஏசி கோச் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் எத்தனை நாளுக்கு ஒரு முறை சலவை செய்யப்படுகிறது என்பது குறித்து ரயில்வே அமைச்சகம் முக்கிய தகவல்களை வழங்கியுள்ளது.
ஆர்டிஐக்கு பதில் அளித்துள்ள ரயில்வே அமைச்சகம் ஏசி கோச்சில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு முறையும், அதிகபட்சம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையும் துவைக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு முறை பயணிகள் போர்வைகளை பயன்படுத்திய பிறகு அவை சலவைக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு போர்வைகள் மடித்து வைக்கப்பட்டு மீண்டும் அனுப்பப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்வைகளில் துர்நாற்றம் அல்லது கறை படிந்தால் மட்டுமே அவை சலவை செய்யப்படும் என்றும் அப்படி இல்லை என்றால் மீண்டும் பயன்பாட்டிற்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
போர்வைகள் மற்றும் தலையணை போன்றவற்றிற்கும் சேர்த்து தான் ரயில்வே பணம் வசூலிக்கும் நிலையில் ஆர்டிஐ-யில் வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போர்வைகளை சுத்தம் செய்வதற்காக இந்திய ரயில்வேக்கு நாடு முழுவதும் 46 சலவை ஆலைகள் வைத்துள்ளன. ஆனால் அங்குள்ள ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்.