சேப்பாக்கத்தின் கில்லி ஜடேஜா... அவரிடம் அதிகமுறை ஆட்டமிழந்தவர் யார் தெரியுமா...?
2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழலில் சிக்கி ஆஸ்திரேலிய பேட்டர்கள் தொடர்ந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
குறிப்பாக, ஸ்மித், லபுஷேன், அலெக்ஸ் கேரி ஆகியோரை வீழ்த்தி ஜடேஜா அவர்களின் மிடில் ஆர்டரையே ஆட்டம் காணவைத்தார். அந்த வகையில், ஜடேஜாவிடம் மூன்று ஃபார்மட்களிலும் அதிகமுறை ஆட்டமிழந்த 5 பேட்டர்களை இங்கு காணலாம்.
அலஸ்டர் குக்: இவரை ஜடேஜா 18 இன்னிங்ஸில் 8 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். குக் இந்த பட்டியலில் 5ஆவது இடத்தை பிடிக்கிறார்.
ஜாஸ் பட்லர்: இவரை ஜடேஜா 25 இன்னிங்ஸில் 8 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். பட்லர் இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடிக்கிறார்.
மொயின் அலி: இவரை ஜடேஜா 22 இன்னிங்ஸ்களில் 8 முறை வீழ்த்தியுள்ளார். மொயின் அலி இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறார்.
ஏஞ்சலோ மேத்யூஸ்: இவரை ஜடேஜா 28 இன்னிங்ஸ்களில் 10 முறை வீழ்த்தியுள்ளார். அந்த பட்டியலில் மேத்யூஸ் இரண்டாம் இடத்தை பிடிக்கிறார்.
ஸ்டீவ் ஸ்மித்: இன்று ஜடேஜாவிடம் வீழ்ந்ததன் மூலம் ஸ்மித் அவரிடம் 11ஆவது முறையாக விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்மூலம், ஜடேஜாவிடம் அதிக முறை ஆட்டமிழந்தவர் ஸ்மித்தான்.