MS Dhoni: தல தோனிக்கு எப்படியெல்லாம் வருமானம் வருது தெரியுமா?

Sat, 12 Jun 2021-8:56 pm,

எம்.எஸ்.தோனி எண்ணற்ற பிராண்டுகளின் தூதராக உள்ளார். தோனியின் நிகர மதிப்பு அவரது ஒப்பந்தங்களைப் பொறுத்தது. அவருக்கு இன்னும் சந்தையில் நல்ல மதிப்பு இருப்பதால் அவருக்கு பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், எம்.எஸ். தோனி மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். முன்னாள் இந்திய கேப்டன் ஸ்போர்ட்ஸ்ஃபிட் வேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட ஜிம்களை வைத்திருக்கிறார்.  

எம்.எஸ் தோனி ஒரு கால்பந்து விளையாட்டின் மீது மோகம் கொண்டவர். எனவே, இந்தியன் சூப்பர் லீக்கில், Chennaiyin FC அணியில் தோனியும் பங்கு வைத்திருக்கிறார்.

பிப்ரவரி 2016 இல் மீண்டும் செவன் பிராண்ட் தொடங்கப்பட்ட போது, தோனி பிராண்ட் தூதரானார்.  

 

எம்.எஸ்.தோனி விளையாட்டில் முதலீடு செய்ய விரும்புபவர். Ranchi Rays என்ற ஹாக்கி கிளப்பில் தோனி முதலீடு செய்திருக்கிறார்  

தோனி ஹோட்டல் தொழிலிலும் கால் பதித்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் மஹி ரெசிடென்சி என்ற ஹோட்டலை வைத்திருக்கிறார் தல தோனி. 

பைக்குகள் மீதான தோனியின் காதல் அனைவருக்கும் தெரிந்ததே. பலவிதமான பைக்குகளை வாங்கி சேகரித்துள்ளார் என்பது சாதாரண விஷயம். சூப்பர்ஸ்போர்ட் உலக சாம்பியன்ஷிப்பில் மஹி ஒரு பந்தய அணியையும் வைத்திருக்கிறார். நடிகர் அக்கினேனி நாகார்ஜுனாவுடன் இணைந்து Supersport World Championship அணியின் உரிமையை தோனி வைத்திருக்கிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link