புத்தாண்டு முதல் எந்தெந்த கார்களின் விலை அதிகரிக்கும் தெரியுமா?

Thu, 17 Dec 2020-12:22 pm,

கார் சந்தையில் முன்னணியில் இருக்கும் மாருதி சுசூகி இந்தியா (Maruti Suzuki) மற்றும் உள்நாட்டு தயாரிப்பான மஹிந்திரா மற்றும் மஹிந்திரா ஆகியவை ஜனவரி 1 முதல் தங்கள் வாகனங்களின் விலையை அதிகரிக்கவிருக்கின்றன.

மஹிந்திராவின் (Mahindra & Mahindra) பயணிகள் மற்றும் வணிக (commercial) வாகனங்கள் என இரு வகை வாகனங்களிலும் விலை ஏற்றம் இருக்கும்.  

கடந்த ஆண்டு, பல்வேறு செலவுகள் (Input costs) அதிகரித்ததன் காரணமாக நிறுவனத்தின் வாகனங்களின் விலை மாற்றப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக மாருதி சுசூகி (Maruti Suzuki) இந்தியா தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லாக்டவுனால் ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து மீண்டு வரும் நேரத்தில் கார் உற்பத்தியாளர் மாருதியின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.  நவம்பர் மாதத்தில், மொத்த உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையில் 2.4 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 1,39,133 ஆக இருந்தது. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 1,35,775 என்ற அளவில் இருக்கிறது. மாருதியின் (Maruti Suzuki) ஒட்டுமொத்த விற்பனை, ஏற்றுமதி உட்பட 1,53,223 ஆக இருந்தது, இது 2019 நவம்பரில் 1,50,630 ஆக இருந்தது, இது 1.7 சதவீத வளர்ச்சியாகும்.

மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நவம்பர் மாதத்தில் மொத்த விற்பனையில் 3.62 சதவீதம் அதிகரித்து 42,731 என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் நிறுவனம் 41,235 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது. உள்நாட்டு சந்தையில், பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதம் 24 சதவீதம் அதிகரித்து 18,212 ஆக இருந்தது, இது 2019 நவம்பரில் 14,637 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link