பொங்கல் அன்று சிறப்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காலம்காலமாக விளையாடுவது ஏன் தெரியுமா!

Fri, 10 Jan 2025-4:31 pm,

பொங்கல் திருநாள் என்பது தமிழக மக்களின் உணர்வுபூர்வ தொடர்பை உருவாக்குகிறது. இதனை விவசாயிகள் அறுவடை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். 

 

இந்தியாவில் இதனைப் பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்று அழைக்கின்றனர். இந்த நாளில் சூரியன் தனது திசையை மாற்றி வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாள் என்று அறிவியல் ரீதியாகக் கூறப்படுகிறது. 

ஜல்லிக்கட்டு விளையாட்டின் முத்திரையான கல்வெட்டு சிந்து சமவெளி நாகரீகத்தின் முத்திரை புது டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  இதில் ஒரு மனிதன் காளையை முடக்குவதைச் சித்தரிக்கும் அழகிய குகை ஓவியம் இடம்பெற்றுள்ளது.

கி.மு. (400 - கி.மு 300) சங்க கால இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு குறித்து 150 கவிதைகள் அடங்கிய சங்க இலக்கியமான கலித்தொகையில் இந்த விளையாட்டு அழகாகக் கவிதையாக விவரிக்கப்பட்டுள்ளது.

 

ஏறு தழுவுதல்: ஏழு தாழ்வுதல் என்பதன் பொருள் ஏறு என்றால் காளை மற்றும் தழுவுதல் என்றால் கட்டிபித்தல் என்றுப் பொருள். மேலும் இந்த விளையாட்டு குறித்து அறியக் கலித்தொகை கவிதையைப் படிக்கலாம். 

 

சிந்து சமவெளி:மொஹஞ்சதாரோவில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும்போது இந்த விளையாட்டின் பாரம்பரிய தொன்மையை அங்குக் கண்டுபிடிக்கப்பட்டது. 

ஜல்லிக்கட்டு மைதானம்: கலித்தொகையில் ஜல்லிக்கட்டுக்கான மைதான அமைப்பைக் கலித்தொகை முன்பே அழகாகக் கவிதையாக எழுதி மக்களுக்கு ஜல்லிக்கட்டு விளையாட்டின் தொன்மையை எடுத்துரைத்துள்ளது. 

 

ஜல்லிக்கட்டு விளையாட்டு பாரம்பரிய விளையாட்டைப் பாரம்பரிய பொங்கலில் வைப்பதே சிறந்தது. ஏனென்றால் பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் இதன் அடிப்படையில் திருநாள் கொண்டாடப்படுகிறது.

வாடி மஞ்சுவிரட்டு - வாடிவாசல் எனப்படும் மூடிய இடத்தில் காளையை விடுவிக்கும் பாரம்பரிய முறை, அங்கு இருந்து ஆண் வீரர்கள் கூம்பு பிடிக்க முயல்வார்கள். வேலி மனுவிரட்டு - உண்மையான நிகழ்ச்சி தொடங்கும் இடத்திலிருந்து காளைகள் வெளிப்படையாக மைதானத்திற்குள் கொண்டு செல்லப்படுகின்றன. சிவகங்கை, மதுரை கிராமங்களில் இதுபோன்ற காளைகளை அடக்குவது மிகவும் பிரபலம். வடம் விரட்டு - இந்த வகை காளைகளை 15 மீட்டர் நீளமுள்ள கயிற்றில் கட்டி அவை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படும். கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பையைப் பிடிக்க ஒரு குழுவினர் முயல்வார்கள்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link