சில ஆப்பிள்களில் மட்டும் ஏன் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன என்று தெரியுமா?
சந்தை அல்லது சூப்பர் மார்க்கட் போன்ற இடங்களில் விற்கப்படும் ஆப்பிள்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கும். அவற்றிற்கு என்ன அர்த்தம் என்று பலரும் தெரிந்து வைத்திருப்பதில்லை.
ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற பழங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை பார்த்தால் அவை நல்ல தரமான பழங்கள் என்று நினைப்போம். பெரும்பாலான மக்கள் அவை விலை உயர்ந்தவை என்று நினைக்கிறார்கள்.
பொதுவாக ஆப்பிள்களில் இருக்கும் ஸ்டிக்கர்கள் பழத்தின் தரம், அவை எப்படி வளர்க்கப்படுகிறது என்பதை குறிக்கிறது. அதனை விளக்குவதற்காக சில எண்களும் இடம்பெற்று இருக்கும்.
4 இலக்க எண்கள் இருந்தால் அந்த பழங்களில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.
சில ஆப்பிள்களில் 5 இலக்க எண்கள் இருக்கும். இந்த பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்பதற்கான அர்த்தம் ஆகும். இந்த பழங்கள் இயற்கையானவை அல்ல.
ஆப்பிள்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் நமது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை. எனவே ஆப்பிள் வாங்கும் போது அதில் உள்ள ஸ்டிக்கரை படித்து பார்த்து வாங்குங்கள்.