தூக்கத்தில் கனவு வந்தால் இந்த பேய்கள் வருகிறதா? காரணம் என்ன? @ghost
மனிதன் இறந்த பிறகு, அவர் உடலில்லாமல், ஆவியாக சுற்றுவார்கள், தங்களுடைய ஆசைகளை தீர்த்துக் கொள்வார்கள் பழி வாங்குவார்கள் என்ற நம்பிக்கை பயமாக மாறுகிறது.
நமது நிஜ உலகில் இருப்பது போலவே, ஆவியுலகிலும், நல்ல் ஆவியும், கெட்ட ஆவியும் இருக்கிறது என்று திரைப்படங்கள் சொல்கின்றன. உண்மையில் திரைப்படங்களும் ஆவி பயத்திற்கு தூபம் போடுகின்றன.
ஆவியுலகம் என்பது அனைவருக்கும் அச்சுறுத்தும் விஷயமாகவே இருக்கிறது. நன்மை தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் ஆவியுலகம் என்பது அச்சுறுத்தும் விஷயமா?
ஆயுட்காலம் முடியாமல் இறந்து போனவர்கள், தற்கொலை, விபத்துக்கள் போன்று துர்ரணம் அடைந்தவர்களின் ஆவி பேய், பிசாசுகளாக உலவுகின்றன என்று நம்பப்படுகின்றன.
பேய், பிசாசு, காத்து, கருப்பு போன்றவை மூட நம்பிக்கை ஆகும். மனதின் அச்சங்கள், இவை தைரியமானவர்களை ஒன்றும் செய்யாது என்று மனவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் மதம் மற்றும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களிடையே பேய், பிசாசு என்ற நம்பிக்கை அதிக அளவில் இருக்கிறது.
பேய் பயமுறுத்துகிறதோ இல்லையோ, பிசாசு துன்புறுத்துகிறதோ இல்லையோ, மனிதர்களின் மன அச்சமே பேரச்சமாக பேயச்சமாக மாறிவிட்டது.