கடந்த 6 மாதங்களில் உங்கள் Aadhaar card எங்கே, எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது தெரியுமா?
ஆதார் அட்டை எங்கு, எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய UIDAI வசதியைப் பயன்படுத்தவும். வருமான வரி தாக்கல் செய்வது முதல் பான் கார்டுடன் இணைப்பது வரையிலான பல சேவைகளுக்கு ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாகும். ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கான மிக முக்கியமான சான்றுகளில் ஒன்று ஆதார். ஆன்லைனில் ஆதார் சேவைகளைப் பெறுவதற்கு, 12-இலக்க அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வைத்திருப்பது முக்கியம்.
ஆதார் அங்கீகார வரலாறு என்பது, UIDAI இணையதளத்தில் இருக்கும். ஆதார் அட்டை வைத்திருப்பவர் கடந்த காலத்தில் செய்த அங்கீகார விவரங்களை இந்த வசதி வழங்குகிறது.
அங்கீகார வரலாறு சேவை UIDAI இணையதளத்தில் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை வைத்திருப்பவர் அவர்களின் விவரங்களை அறிய https://resident.uidai.gov.in/aadhaar-auth-history இல் உள்நுழையலாம்.
ஆதார் அட்டை வைத்திருப்பவர் தனது ஆதார் அங்கீகார வரலாற்றை யுஐடிஏஐ வலைத்தளங்களிலிருந்து தங்களுடைய ஆதார் எண் / விஐடியைப் பயன்படுத்தி தெரிந்துக் கொள்ளலாம். இந்த சேவையைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயமாகும்.
கடந்த 6 மாதங்களில் எந்த அங்கீகார பயனர் நிறுவனம் (AUA) அல்லது அட்டை வைத்திருப்பவரின் அனைத்து அங்கீகார பதிவுகளின் விவரங்களை ஆதார் எண் வைத்திருப்பவர் காணலாம். இருப்பினும், ஒரு சமயத்தில் அதிகபட்சம் 50 பதிவுகளைப் பார்க்க முடியும்.
1. ஆதார் அங்கீகார வரலாறு பக்கத்தைப் பார்வையிடவும்
2. ஆதார் எண்ணை உள்ளிடவும்.
3. பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்.
4. 'Generate OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
5. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசியில் OTP வரும்.
6. தகவல் காலம் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைத் தேர்வுசெய்க.
7. OTP ஐ வழங்கவும், 'Submit' என்பதைக் கிளிக் செய்யவும்.
8. தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில் செய்யப்பட்ட அனைத்து ஆதார் அங்கீகார கோரிக்கைகளின் தேதி, நேரம் மற்றும் வகை அனைத்தும் காண்பிக்கப்படும்.