வீட்டிற்கு வந்தவுடன் கால்களை கழுவ வேண்டுமா? ஆயுர்வேதத்தில் சொல்வது என்ன?
நாம் வெளியில் பல இடங்களுக்கு சென்று இருப்போம், என்னதான் காலணி அணிந்து இருந்தாலும் பாதங்களில் அழுக்கு இருக்கும். எனவே வீட்டிற்கு வந்தவுடன் கழுவுவது சுத்தமாக இருக்க உதவி செய்கிறது.
ஆயுர்வேதத்தின் படி உங்கள் கால்களைக் கழுவிய பிறகு, அப்படியே விடாமல் முழுமையாக துடைப்பது அவசியம் என்று கூறுகிறது. மேலும் உங்களுக்கு அதிக பதற்றம் இருந்தால் கால்களை கழுவுவதன் மூலம் சரி செய்ய முடியும்.
உங்கள் கால்களை அடிக்கடி கழுவுவதன் மூலம் உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. நமது பாதங்கள் அதிக உணர்திறன் கொண்டவை. எனவே தூங்கும் முன்பு அவற்றை சுத்தம் செய்வது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது.
உங்கள் பாதங்களில் குளிர்ந்த நீர் படும் போது, உங்களை அமைதியாக உணர செய்து, நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது. மேலும் உங்கள் பாதங்களில் வேப்ப எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம்.
வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் கால்களை கழுவுவது சுகாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் இல்லாமல், நல்ல மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
உங்கள் கால்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய இரவில் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம். உங்கள் கால்விரல்களுக்கு இடையில் உள்ள அழுக்களை சுத்தம் செய்யவும். சிறிது நேரம் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.