SIP, PPF, EPF, VPF.... வேகமாக பணத்தை இரட்டிப்பாக்கும் அசத்தல் திட்டங்கள்
கூட்டு வட்டியின் உதவியால், வெறும் வட்டி மூலமே, நீங்கள் முதலீடு செய்த தொகையை விட 2 மடங்கு அல்லது 3 மடங்கு தொகையை உருவாக்கலாம். நீண்ட கால முதலீட்டின் மூலம், உங்களை ஒரு பெரிய தொகையின் உரிமையாளராக மாற்றும் சில அசத்தலான திட்டங்கள் பற்றி இங்கே காணலாம். இந்த திட்டங்கள் உங்களை எளிதாக கோடீஸ்வரராக்கும் வல்லமை கொண்டவையாகும்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) இந்த நாட்களில் முதலீட்டாளர்கள் இடையே மிகவும் பிரபலமாக உள்ளது. SIP மூலம் மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகின்றது. இந்த முதலீட்டை நீங்கள் தவணைகளில் செய்யலாம்.
நீங்கள் SIP இல் எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக நீங்கள் கூட்டுத்தொகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். சந்தையில் நேரடியாகப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்து அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், குறைந்த ரிஸ்க் உள்ள எஸ்ஐபியில் முதலீடு செய்யலாம். சந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால், இது உத்தரவாதமான வருமானத்தை வழங்காது.
ஆனால் பொதுவாக SIP இல் மதிப்பிடப்பட்ட வருடாந்திர வருமானம் 12 சதவீதம் வரை இருக்கும். சில நேரங்களில் இது 14 மற்றும் 15 சதவிகிதம் வரையும் செல்லலாம். SIP இன் கால அளவு எவளவு அதிகமாக உள்ளதோ, லாபமும் அவ்வஅவு அதிகமாக இருக்கும். நீண்ட காலத்திற்கு எஸ்ஐபி -இல் முதலீடு செய்வதன் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை ஈட்டலாம்.
இந்திய குடிமகக்கள் அனைவரும் பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF) முதலீடு செய்யலாம். இது ஒரு பழைய மற்றும் பாதுகாப்பான வரி சேமிப்பு மற்றும் முதலீட்டு வழிமுறையாக கருதப்படுகிறது. PPF இல் நீண்ட கால முதலீட்டில் கூட்டும் பலன் கிடைக்கும். தற்போது, பிபிஎஃப் மீதான வட்டி 7.1 சதவீதம் வரை உள்ளது.
15 ஆண்டுகளுக்கு PPF இல் முதலீடு செய்யலாம். எனினும் இந்த முதலீட்டை 5 ஆண்டுகளுக்கான பிளாக்குகளாக அதிகரித்து, முதலீட்டை தொடரலாம். இதன் மூலம் நல்ல தொகையைச் சேர்க்கலாம். இந்தத் திட்டம் EEE பிரிவின் கீழ் வருகிறது. ஆகையால், முதலீடு, வட்டி மற்றும் முதிர்வு ஆகியவற்றில் வரி விலக்கு கிடைக்கும்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது வேலை செய்பவர்களுக்கு ஒரு சிறந்த முதலீட்டு விருப்பமாகும். இது உங்கள் முதுமையை பாதுகாக்கும் ஓய்வூதிய திட்டமாகும். முதலீட்டாளர்கள் EPF இல் கூட்டு வட்டியின் பலனையும் பெறலாம். மேலும், மற்ற சேமிப்பு திட்டங்களை விட இதற்கு கிடைக்கும் வட்டி அதிகம். தற்போது, பிஎஃப் -இல் 8.25% வடி கிடைக்கிறது. ஆனால் EPF இல் நீங்கள் குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே பங்களிக்க முடியும்.
முதலீட்டாளர்கள் பிபிஎஃப் -இன் வட்டி விகிதங்களைப் பயன்படுத்தி அதிக பணம் ஈட்ட விரும்பினால், அதன் பங்களிப்பை அதிகரிக்க விரும்பினால், VPF இன் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து PF இல் பங்களிப்பை அதிகரிக்கலாம். இதன் மூலம், அதிக தொகைக்கு கூட்டு வட்டியின் பலனைப் பெற முடியும். மேலும் நீங்கள் ஓய்வு பெறும் வரை நல்ல தொகையை இதன் மூலம் சேர்க்கலாம். மேலும் இந்தத் தொகையில் வரி விலக்கின் பலனையும் பெறலாம்.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.