Women’s Day 2021: Top-20 விருது பெற்ற தமிழிசை சவுந்தரராஜனின் முன்னேற்றப் பாதை

Mon, 08 Mar 2021-9:57 am,

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் தொடங்கிய டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனின் பயணம் தெலுங்கானா மாநில ஆளுநர் வரை நீண்ட நெடிய பயணம். 

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தனின் மகளான டாக்டர் தமிழிசை, பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவர்.  

தமிழிசையின் டாக்டர் பட்டம் கெளரவ பட்டம் அல்ல, அவர் மருத்துவ படிப்பு படித்தவர்.

தமிழகத்தை சேர்ந்த தமிழச்சி டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் 2020 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க டாப் -20 குளோபல் வுமன் ஆஃப் எக்ஸலன்ஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

"நீங்கள் பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம், பெண்களின் சமத்துவம் மற்றும் சமூகத்திற்கான உங்கள் சிறந்த பங்களிப்பு ஆகியவற்றை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லும் பெண்களின் பிரதிநிதியாக இருப்பதால், இந்த விருதுக்காக உங்களை தேர்வு செய்துள்ளோம்" என்று விருது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின-சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்காக போராடுவதற்கான முயற்சிகளின் மூலம் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதில் டாக்டர் தமிழிசை மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த விருது இது.

புதுச்சேரியின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்

இந்த ஆண்டிற்கான விருதுகள் பெற்ற 20 தலைசிறந்த பெண்களின் பட்டியலில் அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸும் இடம் பெற்றுள்ளார்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link