புது வீடு கட்டுபவரா? கடன் வாங்கவில்லை என்றாலும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய Tips
சொந்த வீடு என்பது பலரின் கனவாக்வே உள்ளது. சொந்த வீடு வாங்குவதை வாழ்நாள் லட்சியமாக கொண்டு பலர் செயல்படுவார்கள். வீடு கட்டுவதற்கு அடிப்படையானது, விருப்பம் மட்டுமல்ல, பண வசதியும் தான். நம்மிடம் இருக்கும் பணம் பற்றாது என்றால், கடன் வாங்கிக் கொள்ளலாம். இன்று பல வங்கிகளும் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கின்றன
சிலர் கையில் பணமே இல்லை என்றாலும் கடன் வாங்கி வீடு வாங்குவார்கள், அல்லது கட்டுவார்கள். உண்மையில், இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்கி வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது
வங்கிகளில் கடன் வாங்குவது பாதுகாப்பானது. வங்கிகள் கேட்கும் ஆவணங்களை கொடுத்தால், குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். வீட்டு ஆவணங்களை நாம் சரி பார்ப்பதை விட, வங்கியின் சட்ட நிபுணர்கள் சரி பார்த்துவிடுவார்கள், நமக்கான அபாயம் குறைவு என்பதற்காகவே வங்கியில் லோன் வாங்கி வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை, அதிகரித்துவிட்டது என்பது நிதர்சனமான உண்மை
வங்கியில் கடன் கொடுப்பதற்கு முன்னதாக, உங்களின் திருப்பிச் செலுத்தும் திறனை வங்கி பார்க்கும். அது, சிபில் ஸ்கோர் மூலம் தெரியவரும்
வீடு வாங்குவதற்கு அனுமானிக்கப்பட்ட தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தை தான் கடனாக பெறமுடியும். எஞ்சிய தொகையை நமது சேமிப்பில் இருந்து கொடுக்க வேண்டும். வீடு கட்டுவதற்கான/வாங்குவதற்கான, மதிப்பீட்டுல் முடிந்த அளவு நமது சேமிப்பில் இருந்து பணம் கொடுப்பது, கடனுக்கான வட்டியைக் குறைக்கும்
வீட்டுக் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி, எவ்வளவு வட்டி வரும், அசல் எவ்வளவு, என்று பார்த்து, எதிர்கால செலவினங்களையும் அனுமானித்து அதற்கேற்ப மாதாந்திர தவணையை நிர்ணயம் செய்யவும்
பல்வேறு விதமான வீட்டுக் கடன்கள் இருப்பதால், உங்களுக்கு ஏற்ற சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்.வெவ்வேறு வீட்டுக் கடன் சலுகைகளை ஒப்பிட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கவும்.
உங்கள் கடன் கொடுப்பவருடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள்