குழப்பிய Google Maps; பாதை மாறிய மாப்பிள்ளை ஊர்வலம்; மலைப்பாதையில் ஏற்பட்ட மரணம்
)
தொழில்நுட்பத்தில் கால கட்டத்தில், நாம் போகும் இடத்திற்கான பாதையை கண்டறிய, நாம் கூகுள் மேப்பை பயன்படுத்துகிறோம். ஆனால், அது எல்லா நேரமும் சரியாக இருப்பதில்லை.
)
இந்தோனேசியாவில் கூகிள் மேப்பின் தவறு காரணமாக, ஒரு மணமகன் மற்றொரு திருமண இடத்தை அடைந்தார். விருந்தினர்கள் வரவேற்றனர், மேலும் அவர்களுக்கு காலை விருந்தும் வழங்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான உரையாடலின் போது, அதிர்ஷ்டவசமாக மணமகளின் குடும்பத்தில் ஒருவர் ஏதோ தவறாக இருக்கிறதே உணர்ந்தார். விசாரித்ததில், ஒரே கிராமத்தில் இரண்டு விழாக்கள் ஏற்பாடாகியிருந்தது. ஒன்று திருமணம் மற்றொன்று நிச்சயதார்த்தம். ஒரே கிராமத்தில் நடந்த இந்த நிகழ்வின் காரணமாக குழப்பம் ஏற்பட்டது.
)
இந்தோனெஷியாவின் மத்திய ஜாவாவின் பாக்கிஸ் மாவட்டத்தில் லோசரி ஹேம்லெட். என்ற இடத்திற்கு பதிலாக ஜெங்க்கோல் ஹேம்லெட் என்ற இடத்தை அடைந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், மாப்பிள்ளை இடம் மாறிவிட்டார்.
மகாராஷ்டிராவின் அகமது நகரில் ஜனவரியில், கூகிள் வரைபடத்தை நம்பிய ஒருவர் அவர் உயிரை இழந்தார். அந்த நபர் கூகிள் மேப்பின் காரணமாக, அணை இருந்த இடத்தில், வேகமாக நேரான பாதையில் முன்னால் சென்று அணையில் காருடன் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இதில் வாகனத்தின் ஓட்டுநர் இரண்டு நபர்களுடன் மகாராஷ்டிராவின் மிக உயரமான சிகரமான கல்சுபாய் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கூகுள் மேப் உதவியுடன் மலைப்பாதையில் சென்ற கார் மலை பாதை சென்று கொண்டிருந்த போது கூர்மையான வளைவில் சிக்கி, விபத்துக்குள்ளானது. கூர்மையான திருப்பம் காரணமாக கார் அணையில் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு பேர் மீட்கப்பட்டனர். ஆனால் ஒருவர் இறந்தார்.